________________
27 விழாதவாறு அத்துணை அற்புதமாக அமைக்கச் சொல்ல வேண் டும்' என்று உற்சாகத்துடன் கருத்தறிவித்தான் இராசேந்திரன். "சிற்பிகள் என்றதும் நினைவு வந்தது; கண்டராதித்தா ! எனக்கு நெடுநாளைய ஆசை ! அதை அந்தக்கோயிலில் நிறைவேற்றி யாக வேண்டும்” என்று பரபரப்புடன் தொடங்கினான் மன்னன். அனைவரும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர் . ‘ஆண்டவன் ஆடியதாக உள்ள திருத்தாண்டவம் இருக் கிறதே' -என்று அவன் முடிப்பதற்குள், அதென்னப்பா ; அதை ஆண்டவன்தானா ஆட முடியும்? எத்தனையோ ஆரணங்குகள் ஆடுகிறார்கள்! என்று குறுக்கிட்டான் இராசேந்திரன். அது "இராசேந்திரா ! உன் குறும்புமட்டும் போகாது! நான் கலைத்துவத்தோடு அந்தத் தாண்டவத்தைப் பார்க்கிறேன். ஓர் உன்னதக்கலை! இந்நேரம் உன் மனைவி பஞ்சவன்மாதேவி யிருந்தால் என் பக்கம் சேர்ந்துகொண்டு உன்னைத் தாக்கியிருப் பாள் !” என்று செல்லக் கோபம் காட்டினான் மன்னன். "இப்போதுதான் என்ன ? அவள் மும்முடிச் சோழபுரத் திற்குத்தான் போயிருக்கிறாள். போய் அழைத்து வரட்டுமா? இது இராசேந்திரனின் கேள்வி. அதற்குள் குந்தவையார், "இல்லை, இல்லை. அவள் நாளைக்கு வந்துவிடுவாள். அதுவரை யில் உங்கள் வாதத்தை ஒத்திவையுங்கள் !" என்றார் சிரித்துக் கொண்டே ! 'அத்தை ! எனக்குக் கலையார்வம் இல்லை என்கிறாரே, அப்பா ! நீங்கள் நம்புகிறீர்களா ? இராசேந்திரன் குந்தவையாரிடம் அன்பொழுகக் கேட்டான். சே, சே ! யார் சொன்னது ? உன் மனைவி பஞ்சவன்மாதேவி ஆடுவதும் நீ பாடுவதும் எத்தனையோ முறை என் கவனத்திற்குக் 'கொண்டுவரப்பட்டிருக்கிறது. இராசேந்திரன் வெட்கத்தால் குந்தவையாரின் கேலி கண்டு. தலைகுனிந்துகொண்டான், 'சரி, சரி ! நீங்கள் இடையே குறுக்கிட்டு நான் சொல்ல வந்ததை மறந்துவிடப் போகிறேன். கண்டராதித்தா ! இறைவ னின் ஏழுவகை ஆடல்களில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு என்பது தான் எல்லாருக்கும் தெரியுமே ! நாம் கட்ட இருக்கும் கோயில் மேல்தளத்தின் உட்பாகத்து அடிவரிசையில் இறைவனது தாண்ட வங்களைச் சிற்பங்களாகச் செதுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நூற்றெட்டு நடை நிலைகளை நூற்றெட்டுச் சிற்பங்களாக அமைத் திட வேண்டும். ஒவ்வொரு சிற்பத்திலும் கலையின் உயிர்ப்பும்