________________
28 துடிப்பும் மிளிர்ந்திட வேண்டும். அந்தச் சிற்பங்களை உருவாக்கு. வதற்கு எவ்வளவு பொருள் செலவானாலும் பரவாயில்லை. திறமை மிக்க சிற்பி யொருவனை இப்போதே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த என் ஆசையை நிறைவு செய்யவேண்டியது நின் தலையாய பொறுப்பாகும். என்று இராசராசன் மிக்க உணர்ச்சியுடன் கூறினான். நூற் றெட்டுக் கலைச்சிற்பங்களை அமைப்பதிலே மன்னன் காட்டுகின்ற அளப்பரிய அக்கறை கண்டு குந்தவையாரும், இராசேந்திரனும் ஒருவரை யொருவர் வியப்புடன் பார்த்துக்கொண்டனர். கோயில் எழுப்புவதற்கான மேலும் பல திட்டவட்டமான யோசனைகளை வெளியிட்ட பிறகு, ஆக்கப்பணியில் இறங்குவதாக உறுதி கூறி, கண்டராதித்தன் விடை பெற்றுக்கொண்டான். அதன் பின் அரசன், சேனாதிபதி கிருஷ்ணன் இராமனான மும்முடிச் சோழப் பிரமராயனை அழைத்து, கோயிலுக்கான திருச்சுற்று மாளிகை எழுப்பும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான். கண்டராதித்தனும் பிரமராயனும் இராசராசேச்சுரத்தை நாலைந்து ஆண்டுகளுக்குள் உருவாக்கிவிட வேண்டுமென்றே ஆவல் துள்ளக் காரியத்தில் இறங்கினர். நாடெங்கணுமிருந்து திறமை மிக்கச் சிற்பிகள் வரவழைக்கப்பட்டார்கள். கற்கள் மலைமலையாகக் குவிக்கப்பட்டன. கோயில் காரியங்கள் குறைவின்றி நடைபெறு வதற்காக முப்பத்தைந்து ஊர்களைத் தேவதானச்சிற்றூர்கள் என்ற. பெயரால் கோயிலுக்குக் கல்வெட்டு மூலம் அரசன் அளித்தான். கோயிற்பணிகள் குறைவற நடைபெற நானூறு தேவ மாதர்கள் கோயிலைச் சுற்றி வடக்கிலும் தெற்கிலுமாகக் குடியேற்றப்பட்ட னர். அந்த மாதர்களில் ஆடல் பாடல்களிலும் வல்லவர்கள் இருந்தார்கள். கோயில் சேவைக்கெனக் கொட்டி மத்தளக்காரர், வீணைவாசிப்பவர், மொரலியம், வங்கியம், பாடலியம், உடுக்கை,. முத்திரைச் சங்கம் முழங்குவோர், உவச்சுப் பறை, சகடை,. கரடிகை என்னும் பறைக் கருவிகள் வாசிப்போர் அனைவரும் தருவிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தனித்தனியே ஒவ்வொரு வேலி நிலம் நிபந்தம் அளிக்கப்பட்டது. கோயில் பண்டாரிகள்,. கணக்கர், திருவிளக்கிடுவலார், மாலைகட்டி, மெய்க்காவலர், தச்சர், கன்னார் எனப்படும் துறையினரும் அமர்த்தப்பட்டனர். கோயில் வேலை முழுவதும் முடிவதற்குள்ளாகவே கோயிலுக்குத் தேவை யான பொருள்களையும் சேகரித்துச் சிறப்புச் செய்வித்தான் அரசன்.. தஞ்சை மாதாவின் மடியில் காலூன்றி எழும் சோழப் பேரர சின் வெற்றிக் கலைச் சின்னத்தைக் காண்பதற்கு நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் நாள்தோறும் ஏராளமானவர்கள் தஞ்சை யில் கூடினார்கள். தினந்தோறும் திருவிழா எனத் தக்க வகையில் விளங்கிற்றுச் சோழனின் தலைமை நகரம்.