________________
29 அந்த மகத்தான காட்சியைக்காண வருபவர்கள் கடல் அலை போல் கூட்டம் கூட்டமாக வந்து திரும்பிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஊர்க்காரர்கள் தஞ்சையைச் சூழ்ந்துகொண்டு கோயிலின் வளர்ச்சியைக் கவனித்துச் சென்ற னர். ஒரு நரை மூதாட்டி மட்டும் நாள் தவறாமல், அந்தி சாயும் நேரத்தில் ஆலயம் கட்டப்படும் இடத்திற்குச் சிறிது தொலைவில் வந்து நின்று, இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிச் சில ஆடுகள் நிற்கும். பின்னர், பொழுது நன்றாகப் போனதும் அவள் ஆடுகளுடன் திரும்பிப் போய் விடுவாள். நரை விழுந்த கூந்தல் எனினும் அதனை வாரி ஒழுங்காக முடித் திருந்தாள், வயது எழுபதை எட்டிப் பிடித்திருக்கும். ஆனால் அவள் நிற்பதற்குக் கம்பைப் பிடித்துக் கொள்ளவில்லை ; நன்றாக உழைத்த உடம்பு என்பது பார்த்தவுடனேயே தெரிந்தது. கொஞ் சம் கொஞ்சமாக விண்ணோக்கி உயர்கிற இராசராசேச்சுரத்தைப் பார்க்கும் அவளது சுருங்கிய முகத்தில் ஒருவித மலர்ச்சி ஏற்படும். தொலைவிலே நின்றுகூட அவளால் சிற்பிகளும் ஏனையப் பணியாளர் களும் நடத்துகிற வேலைகளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. தினந்தோறும் அந்தக் கிழவி வருவதையும் மிகுந்த உற்சாகத்துடன் திருப்பணியைப் பார்வையிடுவதையும் கண்ட சிற்பிகள் சிலர் ஒரு நாள் அவளை நெருங்கிப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினர். அவள் ஆடு வளர்ப்பதைத் தொழிலாகக் கொண்டவள். பெயர் அழகி. தஞ்சைக்கு அருகே நாலு கல் தொலைவிலுள்ள குக்கிராமத்தில் வாழ்கிறாள். இந்த விவரங்களைச் சிற்பிகள் கேட்டறிந்தனர். 'உனக்கேன் பாட்டி இந்த வயதில் இவ்வளவு ஆர்வம் ? ஓர் இளம் சிற்பி சற்றுக் குத்தலாகக் கேட்டு வைத்தான். 'இராசராசச் சக்கரவர்த்தி செய்கிற இந்தக் காரியம் தலை முறை தலைமுறைக்கும் தஞ்சையின் பெயரை உச்சரித்துக்கொண் டிருக்கும். எனக்கிருக்கும் கவலையெல்லாம் இந்தக் காரியத்திற்கு என் பங்கை எப்படிச் செலுத்துவது என்பதுதான் ” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே பதில் கூறினாள் அந்தப் பழுத்த பழம். "ஆயிரம் - கோடியென்று பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொட்டி நடத்தப்படுகிற இந்த மகாப் பெரிய திருப்பணி யில் ஆடு வளர்க்கும் உன்னால் என்ன பாட்டி உதவி செய்ய முடி யும் 33 என்று ஏளனமாகக் கேட்டான் இன்னொரு சிற்பி. கிழவி அழகிக்கு அந்தக் கேள்விகோபத்தைத் தூண்டிவிட்டது.