________________
31 லீலா காலையில் அவைகளைக் கண்ட கிழவி, "ஆண்டவனின் விநோதம்தான் இது ! என்று ஆனந்தக்கூத்தாடினாள். இராசேந். திரனின் நல்லுதவியென்பது அவளுக்குத் தெரியாமலே போய் விட்டது. அவளை இராசேந்திரன் அழைத்துவரச் செய்து, தன் தந்தையிடம் அறிமுகப்படுத்திவைத்தான். அப்போதும் அவள் ஆடுகளை ஆண்டவன் அளித்தான் என்றுதான் சொன்னாள். கிழவி யின் ஆர்வத்தைக் கண்ட இராசராசன் அவளைப் பார்த்துக் கனி வுடன் "அம்மையே ! உமது விருப்பம் ஏதாவது இருப்பின் தெரி விக்கலாம். உடனே நிறைவேற்றுவதற்கு வழி செய்வேன் றுரைத்தான். என் "சக்கரவர்த்தியார் அவர்களே ! தங்கள் திருவாயால் என்னை அம்மையே என்று அழைத்ததைவிட வேறென்ன பாக்கியம். இருக்கப்போகிறது எனக்கு ! தங்களின் அழியாத பெயரை ஆண் டாண்டுக் காலத்திற்கும் சொல்லிக்கொண்டிருக்கப்போகும் இராச ராசேச்சுரத்தில் பணிபுரியும் சிற்பிகளுக்கு உணவளித்த பெருமை யொன்றே எனக்குப் போதும் என்று கூறி, மன்னனின் திருவடிகளில் விழுந்து வணங்கப் போன கிழவி அழகியை மன்னன் தடுத்து நிறுத்தி, "அம்மையே! உமது வெள்ளை உள்ளத்தை நான் புரிந்து கொண்டேன். மன்னன் செய்யும் காரியங்கள் மன்னனுக்கே மட்டும் சிறப்பூட்டுவன அல்ல ! அப்படி இருக்கவும் கூடாது என்பது என் விருப்பம். சோழப் பேரரசின் மேன்மைக்கு யார் பாடுபடுகிறவர்களோ, அவர்கள் யாராயிருப்பினும் என் நன்றிக் குரியவர்கள். என் ஒருவனுடைய தனி ஆற்றலால் விளைந்தது அல்ல இன்றையச் சோழ மண்டலம் ! இதோ நிற்கும் என் வீர மைந்தனின் வாள் வலிமையால் மட்டும் ஏற்பட்டதல்ல இந்தப் பேரரசு ! எத்தனையோ சோழ குல மாணிக்கங்களின் வீரத் தோள் களும், தங்களைப் போன்ற மாதாக்களின் நல்வாழ்த்துக்களும் உருவாக்கிய அரசு இது ! நான் தங்கள் நிழலில் தானம்மா நின்று கொண்டிருக்கிறேன்! அதனால் தாராளமாகக் கேளுங்கள், தங் களுக்கு வேண்டியதை எனப் பரிவுடன் கூறினான். அரசன். கிழவி, ஏதோ சொல்ல வாயெடுத்துச் சற்றுத் தயங்கிப் பின்னர் தொடர்ந்தாள். "மன்னர் மன்னா ! ஏழையின் விண்ணப்பம் ஒன்று உண்டு, கோயிலில் அமைக்கப்படும் விமானத்தின் மேல் தளத்திற்குப் பெரிய அளவில் ஒரே கல்லாக ஒன்று வேண்டுமென்று சிற்பிகள் சொல்லக் கேட்டேன். அப்படிப்பட்ட கல் ஒன்று என் வசம் இருக் கிறது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.' 33 இதைச் சொல்லி முடிப்பதற்குள் கிழவியின் கண்களில் நீர் துளித்துவிட்டது.