பக்கம்:அரும்பு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 ஒரே கல்லா ?" அரசன் வியப்புடன் சிற்பிகளைப் பார்த்துக் கேட்டான். " 'ஆம் அரசர் பெருமானே ! விமானத்தின் மீது ஒரே கல்லில் தளம் அமைப்பது சிறப்புடையதாக இருக்கும் என்று கண்டராதித் தர் கூடக் கருத்துத் தெரிவித்தார். இளவரசர் அவர்களும் அதனை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்” என்றனர் பணிவுடன் சிற்பிகள் ! "விமானம் விண்ணைத் தொடவல்லதாய் அமைகிறது. அதன் உச்சியிலே கொண்டுபோய் மிகப் பெரும் கல்லை ஏற்றுவதென்றால் சாத்தியமாகுமா?” என்ற கேள்வியை இராசராசன் எழுப்பினான். உடனே கிழவி, மிக மரியாதையுடன் தலை வணங்கி, அரசர்க்கரசே ! என் வீட்டிலிருந்து சாரம் ஒன்று கட்டினால் கோபுரத்தின் உச்சிக்கு அந்தக் கல்லை ஏற்றுவது மிகச் சுலபமாக இருக்கும். என் வீட்டுக்கும் கோபுரத்திற்கும் இடையே நான்கு கல் தொலைவு இருக்கும். அங்கிருந்து சாரம் கட்டினால் கல்லைச் சாலையில் உருட்டிக்கொண்டு போவது போலச் சாரத்தில் 'உருட்டிச் சென்று விமானத்தில் ஏற்றிச் சென்றுவிடலாம்.” என்று வழி சொல்லிக் கொடுத்தாள். அவளது வியத்தகு அறிவினைக் கண்டு சோழப் பெருவேந்தன் திகைத்துப்போனான். அவள் அளிக்கும் கல்லை விமானத் தளமாகப் பயன்படுத்த அவன் முடிவு செய்துவிட்டான். அந்த முடிவினைப் புன்னகை ததும்ப அறிவித்தவாறு, "ம்!..நான் என்னதான் பெரிய கோயிலைக் கட்டினாலும் கடைசியில் ஆண்டவன் ‘யாம் கிழவி அளித்த நிழலில் உவந்திருக்கின்றோம் !' எனக் கூறிவிடப் போகிறார்" என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான். அது ஆயாச மூச்சல்ல ! ஆனந்த மூச்சு ! அழகி கூறிய ஆலோசனையின்படியே நான்கு கல் தொலைவி லுள்ள அவள் வீட்டிலிருந்து சாரம் கட்ட ஆரம்பித்து, அதில் அந்தப் பெரும் கல்லைத் தூக்கிவைத்து விமானத்திற்குக் கொண்டு சென்றார்கள் சிற்பிகள். சாரம் கட்டப்பட்ட அந்த இடத்திற்குச் 'சாரப்பள்ளம்' என்ற பெயரும் உடனே வழங்கத் தொடங்கிற்று. கிழவியின் நுண்ணறிவையும், தொண்டு உள்ளத்தையும் கௌரவிக் கும் முறையில் தஞ்சையில் அழகிக்குளம் ஒன்றை அமைக்கச் செய் தும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டான் அரசன். ஆலயம் முடிவடையும் கட்டத்தை அடைந்துவிட்டது. இராச ராசனும் இராசேந்திரனும் குந்தவையாரும் கூறிய ஆலோசனை களின்படி எல்லாப் பணிகளையும் கண்டராதித்தன் நிறைவேற்றி விட்டான். ஆனால் அரசன் விரும்பியவாறு நூற்றெட்டுத் தாண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/38&oldid=1699673" இலிருந்து மீள்விக்கப்பட்டது