பக்கம்:அரும்பு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 பாவம் பிடித்துக் காட்ட வேண்டுமாம். அப்போதுதான் தத்ரூப. மான தாண்டவ நிலைச் சிற்பங்களைச் செதுக்க முடியும் என்று முடி வாகக் கூறிவிட்டான்.” "ஓ ! இயற்கையைக் கலையில் வடிக்கும் உண்மைக் கலைஞன் போலும் ! அவன் கோரியபடி ஏற்பாடு செய்திருக்கலாமே ! ஏன் தாமதம்?" "தேர்ச்சி பெற்ற நடனப் பெண்கள் யாரும் கிடைக்கவில்லை." "என்ன ஆச்சரியம்? நானூறு தேவமாதர்களுக்குத் தலைக்கு. ஒரு வேலி நிலம் நிபந்தம் கொடுத்து நியமித்திருக்கிறேன். அவர் களில் ஆடத் தெரிந்தவர்கள் யாருமே இல்லையா ? 'நூறு நடன மாதர்கள் அந்தச் சிற்பிக்கு முன் ஆடிக்காட்டி விட்டார்கள்.” "" 'நூறு பெண்களில் ஒருத்திகூடத் தேறவில்லையா ? “நக்கன் ராசராச கேசரி, நக்கன் சோழகுல சுந்தரி போன்ற ஆடற்கலையரசிகள் எல்லாரும் தங்கள் திறமை முழுதும் காட்டி ஆடிவிட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு. குற்றம் கூறிப் புறக்கணித்துவிடுகிறான். அவன் தீர்ப்பும் சரியான தாகத் தோன்றுகிறது.” “அப்படியா ? ‘“ஆம் ! அகோர தாண்டவத்தை அழகாக ஆடிக் காட்டியவள் ஆனந்தத் தாண்டவத்தில் தவறு செய்கிறாள். அற்புதத் தாண்ட வத்தை ஆடிக்காட்டிப் பாராட்டைப் பெற்றவள் திரிபுர தாண்ட வத்தினைத் தீமிதிப்பது போல ஆடித் தீர்த்துவிடுகிறாள்.இப்படியே அவர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். அது "சோழப் பேரரசில் கலையின் உயிர் போய்விட்டது. தானே கண்டராதித்தா இதற்குப் பொருள்? கலை வளர்த்த பூமி சோழபூமி என்ற பெருமை நிலைக்கும் என்று எண்ணிக்கிடந்தேன். எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது. கலிங்கம் வென்றேன், ஈழம் வென்றேன் என்றெல்லாம் வருங்காலம் என்னைப் புகழும்போது, என்னுடைய ஆட்சியில் என்னுடைய ஓர் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தோற்றுப்போனேன் என்ற அவச் சொல்லும் சேர்ந்து தானே ஒலிக்கப் போகிறது ? கலை வளர்ச்சிக்காகச் செலவிடப்படும் பொருட் குவியல் என்ன ஆயிற்று ? முறையாகக் கலையைப் பயிற்று விக்கும் கலைக்கூடங்களின் தலையில் பேரிடியா விழுந்துவிட்டது ? அவமானம் ! அவமானம் !! மேலைக் கடற்கரையோரத்து மன்னர் களை என் கப்பற்படை கலக்கியிருக்கிறது. சோழ நாட்டில் கலை கருகியது என்ற செய்தி இப்போது என்னைக் கலக்குகிறது. மகேந் திர மலையில் நான் நிலை நாட்டிய வெற்றித்தூண்! 'அவையெல்லாம் வீண்'என்று இப்போது எனக்குச் சொல்லாமல் சொல்கிறீர்கள் தஞ்சையில் கலை அழிந்தது என்ற தணல் நிகர் செய்தியின் மூலம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/40&oldid=1699677" இலிருந்து மீள்விக்கப்பட்டது