பக்கம்:அரும்பு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

39 “கேட்க வேண்டுமா என்னை ? அவளால் கலை பிழைக்கப் போகிறது ! அவளால் கலை வாழப் போகிறது! அவளால் கலை வளமுறப் போகிறது !” என்று பேரானந்தத்தில் பிதற்றத் தொடங்கினான் அந்த வாலிபச் சிற்பி. மறுநாள் சாமுண்டி, இனியன் குறித்த நேரத்திற்கு வந்து சேர்ந்தாள். சிற்ப வேலை தொடங்கிற்று ! தேவையான அபிநய பாவங்களை அவன் விரும்பியபோதெல்லாம் பிடித்துக் காட்டி, முதல் சிற்பத்தை எழிலோடு வடிப்பதற்குத் துணை நின்றாள். ஒரு நாளைக்கு ஒரு சிற்பச் சிலை வடித்துவிடலாம் என்ற நம்பிக்கையைச் சாமுண்டிக்குத் தெரிவித்து அவளை முதல் நாள் வழியனுப்பி வைத்தான். அடுத்த நாளும் அவர்கள் எண்ணியவாறு சிலை முடிந்தது. அடுத்தடுத்து ஐம்பது நாட்கள் உருண்டு விட்டன. ஒவ்வொரு நாளும் சாமுண்டி வரும்போது வா ! என்று வரவேற்பான். இடையிடையே தேவையான பாவ நிலைகளைக் குறிப்பிடுவான். மாலையில் "போய் வா!" என விடையளிப்பான். இதைத்தவிர மற்ற நேரமெல்லாம் மௌனம் தான் ! கலையுணர்வுதான் அவனை ஆட்சி செலுத்தி வந்தது. சாமுண்டி இருவரைத் எப்போதாவது அழகிக் வியந்து முத்தமளித்து பற்றிப் புகழ்வாள். அந்தச் சிறப்புப்பணி நடைபெறுகிற இடத்திற்கு வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இனியன் தவிர வேறு யாரும் அங்கிருப்பதுமில்லை. கிழவி வருவாள். மகளின் திறமையை மகிழ்வாள். இனியனின் கலைத்திறன் "ஆண்டவனைக் காட்டிலும் சாமுண்டி அழகாக ஆடுகிறாள் ; உண்மைதான் ! ஆனால், அவளைக் காட்டிலும் அழகான சிற்பங்களை யல்லவா நீ படைத்திருக்கிறாய் ?" என்று அவனைத் தழுவி உச்சி மோந்து வாழ்த்துக் கூறுவாள். பின்னர் போய்விடுவாள். ஐம்பது நாட்களுக்குப் பிறகு ஒரு நாள், இனியன் கல்லை மிக நுட்பமாகச் செதுக்கிக்கொண்டிருக்கும்போது, அவன் விரல் நுனி யில் உளி பட்டுவிட்டது. நல்ல வாலிபப் பருவமல்லவா? இரத்தம் குபுகுபு எனக் கொட்டியது. சாமுண்டி பரபரப்படைந்தாள்.உடனே தன் சேலைத் தலைப்பைக் கிழித்து அவன் விரலில் சுற்றிவிட்டாள். அதன் காரணமாக இரண்டுநாள் வேலை தடைப்பட்டது. சாமுண்டி, கோயில் பக்கம் வரவில்லை. அவளைக் காணாதது இனியனுக்கு ஏதோ ஓர் ஏக்கத்தை ஏற்படுத்தியது. அந்த ஏக்கம் எதனால் 'எழுந்தது? இத்தனை நாளாகத் தோன்றாத ஏதோ ஓர் உணர்வு இன்று எங்கிருந்து முளைத்தது ? அப்படியானால் அவளைப் பற்றித் தவறான எண்ணம் தன் நெஞ்சின் அடித்தளத்தில் படிந்து கிடந் ததா ? அந்த எண்ணம் அவளைக் காணவில்லையென்றதும் சிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/45&oldid=1699682" இலிருந்து மீள்விக்கப்பட்டது