________________
40 முளைத்துக் கிளம்பிவிட்டதா ? இவ்வளவு நாளும் அவளைக் கலைக் கண் கொண்டுதானே ரசித்து வந்தான் அந்தச் சிற்பி! இப்போது மட்டும் அவன் கண்களுக்குப் புதுப் பசியை உண்டாக்கியது யார்?' வேறு யாருமில்லை ! அவளேதான் ! சாமுண்டியேதான் ! அவள் பார்வையில் தனி அர்த்தம் இருந்ததா? இல்லை; இதுவரையில் அவன் கவனிக்கவில்லை ! அவள் அழகைக் கண்டு அவன் வியந்திருக் கிறானே தவிர, மயங்கியது கிடையாது. இப்போது ஏனோ எழிலை நினைத்து உருகிக்கொண்டிருக்கிறான். அவள் ஆடிக் காட்டிய ஒவ் வொரு நிலையிலும் கலாதேவியின் சௌந்தர்யத்தைத்தான் அவன் பார்த்துப் பரவசமுற்றிருந்தான். இப்போது அந்த அபிநயங் களின்போது அசைந்த அவள் அழகுத் திருமேனியின் ஒவ்வொரு. அங்கமும் அவன் நெஞ்சத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தி அவனைச் சித்திரவதை செய்துகொண்டிருக்கிறது. ஒருவேளை அவளைக் காணாத காரணத்தால் ஏற்பட்ட தடுமாற் றமாக இருக்கக் கூடுமா ? அங்ஙனமானாலும் அந்தத் தடுமாற்றத். தின் அடிப்படையில் ஏதோ ஓர் உணர்ச்சி தலைதூக்குவானேன்? அந்த உணர்ச்சிக்கு நிச்சயமாகக் கலைமெருகு கொடுத்து மூடி மறைக்க அவன் தயாராக இல்லை. இப்படி இரண்டொரு நாட்கள் அவனைப் பித்தனாக அலைய விட்ட சாமுண்டி, அவன் சிற்ப மண்டபத்தை நாடி வழக்கம்போல் வந்து சேர்ந்தாள். அவனும் வழக்கம் போலத்தான் "வா'" என்று அழைத்தான். ஆனால் அவன் குரல் நடுங்கிற்று. அதை. அவள் உணர்ந்தாள். அவன் கவனிக்கவில்லை. “விரலில் பட்ட காயம் எப்படியிருக்கிறது?" என்று கேட்டாள். "மருந்து எதுவும் போடவில்லை; உன் சேலைத் தலைப்பு பட்ட பிறகும் காயம் ஆறாமல் இருக்குமா ?” என்று படபடவென்று கேட்டு முடித்துவிட்டான். அந்தப் பதைப்பு அடங்கச் சிறிது நேரமாயிற்று, அவனுக்கு! அவள் அவனை மிரட்டுகிற பாவனையில் பார்த்தாள். இனியன் சமாளித்துக் கொண்டு, "ம்! இதுதான் இன்றையச் சிற்பத்துக்குத் தேவையான பாவம்!" - என்று கூறியவாறு உளியைக் கையில் எடுத்துக் கல்லில் செதுக்கத் தொடங்கினான். அன்று வழக்கத்திற்கு மாறாக மாலைப் பொழுதுக்குப் பிறகும் சிற்ப வேலை முடியவில்லை. கொஞ்சந் தான் இருக்கிறது; முடித்துவிடலாம் என்று கூறித் தீப்பந்தங்களின் உதவியோடு அவன் வேலையில் கவனம் செலுத்தினான். அன்று வேலை வேகமாக ஓடாத சாரணம் அவனுக்குத்தான் தெரியும்! சாமுண்டிக்குப் புரியவில்லை. சிற்பச் சிலையின் மீது ஒரு கண்ணும், சாமுண்டியின் மீது ஒரு கண்ணுமல்லவா அன்று இனியனுக்கு இருந்தது! தீப்பந்த வெளிச்சத்தில் சாமுண்டியின் தங்கமேனி' மேலும் தகத்தகாயமாய்த் தோன்றுவதை அவன் அன்றையதினம்