பக்கம்:அரும்பு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 பொங்கக் கூறியபோது, அதன் இதயம் குளிர்தாமரைக் குளம் போல ஆயிற்று. அவள் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள். அவள் பின்னழகைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்கள் இமைக்க மறந்தன. அவன் செதுக்கியிருந்த எண்பத்தொரு சிற்பங்களையும் பார்த்தான். சிற்பங்கள் திடீரென மறைந்து விட்டன. எண்பத்தொரு சாமுண்டிகள் அங்கே ஆடிக்கொண் டிருந்தார்கள். அந்த ஆட்டத்திலே அவன் லயித்துக் கிடந்தான். கலை நினைவோடு உருவாக்கப்பட்ட அந்தச் சிலைகள் சாமுண்டியின் உருவில் அவன் உள்ளத்தில் காதல் தீயை மூட்டிவிட்டுத் தாண்டவ மாடிக் கொண்டிருந்தன. அந்தப் பெரு நெருப்பின் 'ஜுவாலையை அவனால் தாங்கத்தான் முடியவில்லை. தனக்குத்தானே அறிவுரை கூறிக்கொண்டான். பால்பானையை உருட்ட வந்த பூனையை எத்தனை முறை விரட்டினாலும் அது ஓடி ஓடிப் பின்னர் பதுங்கிப் பதுங்கிப் பால்பானையைத்தான் வட்டமிடும். அது போலாயிற்று அவன் உள்ளத்தில் கொப்புளித்துக் கிளம்பிய காதல் மகா சக்தி ! மறுநாள் எண்பத்திரண்டாவது சிற்பத்தைச் செதுக்க அவ னும் தயாராக இருந்தான். அவளும் வந்து சேர்ந்தாள். அவன் அவளைப் பார்வையாலே வரவேற்றான். வா' என்று கூற நா எழவில்லை. "இன்று எண்பத்திரண்டல்லவா ? - அவள் ! ஆமாம்!” அவன் ! 'இன்னும் இருபத்தேழு இருக்கிறதே !- அவள் ! "ஏன் உனக்குக் கஷ்டமாயிருக்கிறதா ? கலை கூடவா தெவிட்டி விட்டது? "இல்லை ! இல்லை ! இன்னும் எத்தனை இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தேன். அவ்வளவுதான் !” "நான் நினைக்கிறேன், இன்னும் நூறு சிற்பங்கள் பாக்கி யிருக்கக்கூடாதா? அத்தனை நாளும் சாமுண்டியின் கலையழகை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு ஏற்படக்கூடாதா என்று ! "நான் நினைக்கிறேன், அரசர்க்கு அரசர் நூற்றெட்டு சிற்பங்களை ஏன் செதுக்கச் சொன்னார் ? எண்பத்து இரண்டுதான் எனறு கூறியிருக்கக்கூடாதா என்று ! "கேலி செய்கிறாயா சாமுண்டி? "இல்லை! இல்லை .. ம், வேலையைப் பார்ப்போம். வீண் பேச்சு எதற்காக ?" சாமுண்டி நடன நிலைக்கான பாவங்களைக் காட்டத் தயாராகி நின்றாள். இனியனும் உளியை எடுத்துக்கொண்டு கல்லினருகே சென்றான். அவனுக்கு உளி பிடிக்கக்கூடச் சக்தியில்லாதது போல் ஓர் உணர்வு! மயக்கம் ! "சௌந்தர்ய தாண்டவம்! என்றான் தழுதழுத்த குரலில் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/48&oldid=1699687" இலிருந்து மீள்விக்கப்பட்டது