பக்கம்:அரும்பு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

43 அவன் நா ஒட்டிக்கொண்டது. அவள் ஆடத் தொடங்கினாள். அவளே சௌந்தர்யச் சுரங்கம்! அதிலே சௌந்தர்ய தாண்ட வம் ஆடச் சொன்னால் எப்படியிருக்கும் ? அவன் தலை கிறுகிறுத் தது. இராசராசேச்சுரமே தலை கீழாகச் சுற்றுவது போன்ற ஒரு நினைவு ! அவனையும் மீறி அவன் கையிலிருந்த உளி, கலைப்பணி யில் ஈடுபட்டிருந்தது. அவள் பூமியில் ஆடவில்லை. அவனது மென்மையான இதயத்தில் ஆடினாள்; அவன் விழி மணிகளில் ஆடினாள்; அவன் நரம்பு, நாளங்களில் ஆடினாள்; இரத்தத்துளி களில் ஒவ்வொன்றிலும் ஆடினாள். ஆடினாள் ; ஆடினாள் ; ஆடிக் கொண்டேயிருந்தாள்! அவள் பட்டுப் பாதங்கள் அவன் தலையில் பட்டு ஆடுவதுபோல் நினைத்தான். அவள் மாணிக்கக் கரங்கள் அவன் மார்பகத்தைத் தழுவுவதுபோல் உணர்ந்தான். அவள் விழிகள் அவன் விழிகளை விழுங்குவது போல் கற்பனை செய்தான். அவள் இதழ்கள், அவன் இதழ்களை. அய்யோ ! அதற்குள் கருங்கல் செதில் ஒன்று அவன் கண்ணில் தெறித்துக் குத்திக் கொண்டது ; அவன் உளியைக் கீழே எறிந்துவிட்டு “அம்மா ! என்று கதறிவிட்டான். ... " அவள் பதறிப்போனாள். அவனைத் தாங்கிப் பிடித்து விழாமல் நிறுத்தினாள். அவளது அழகிய கரங்களால் அவன் முகத்தை நிமிர்த்திக் கண்ணில் விழுந்த கருங்கல் செதிலைக் காந்தள் விரலால் மிக லாவகமாக எடுத்தெறிந்தாள். அவ்வளவுதான் ! ஒரு திடீர் மின்னல் ! அவன் அவளைப் பலங்கொண்டமட்டும் சேர்த்துப் பிடித்துத் தழுவிக்கொண்டான் ! மின்னலைத் தொடர்ந்து பேரிடி ! பெரும் புயல்! பிரளயத் தாண்டவத்தின் பிர திபலிப்பு! சாமுண்டி அவனைப் பிடித்துக் கீழே வேகமாகத் தள்ளிவிட்டாள். அலறிக்கொண்டு தரையில் மோதி விழுந்தான். விழுந்தவன் சிறிது நேரம் எழவேயில்லை. அவன் கண்கள் சுழன்றன; சிற்ப மண்டபமே சுழன்றது; அவன் செதுக்கிய எண்பத்தொரு சிலை களும் சுழன்று ஆடின! அவன் முடிய மானாடியது ! பிறகு அது மிரண்டோடியது! மான் புலியாக மாறிப் பாய்ந்தாடியது ! இறைவன் கழுத்தில் அணிந்திருந்ததாகச் செதுக்கப்பட்ட பாம்புகள் ஆயிரமாயிரம் படமெடுத்தாடின ! இறைவன் கைநெருப்பு பல திக்கிலும் சூழ்ந்தாடியது ! இனியன் சுழலும் கண்களை நிலைநிறுத்தி எழுந்திடப் பார்த்தான். வில்லை ! அப்போது "தேi !’” என்று ஒரு குரல் கேட்டுச் சாமுண்டி திரும்பிப்பார்த்தாள். திடுக்கிட்டுப்போனாள். இராசேந்திரன் அவளை நோக்கிப் பரபரப்புடன் வந்துகொண்டிருந் தான்; அவன் பின்னால் இராசராசச் சோழரும் குந்தவையாரும் வந்தனர். சாமுண்டி இராசேந்திரனிடம் ஓடி, அத்தான்!' என்று தழுவிக்கொண்டு கண்ணீர் வழிய வழிய விம்மி அழத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/49&oldid=1699690" இலிருந்து மீள்விக்கப்பட்டது