இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
பதிப்புரை “'மினி தொடர் கதை குறுநாவல் 15 இவற்றில் எந்தப் பெயரை வேண்டுமானாலும் நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய நான்கு மணியான கதைகளை வெளியிடுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். முதல் கதையின் பெயரே இந்த நூலின் பெயராக அமைகிறது. கலைஞரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை அழகிய நூல் வடிவில் கொணர்ந்து, அந்த அழியாத இலக்கியச் செல்வங்களைக் காப்பதில் தமிழ்க்கனி பதிப் பகம் மகிழ்ச்சி அடைகிறது. தமிழ் மக்களின் ஒத்துழைப்பும், உறுதுணையும் இடையறாது தொடர்ந்திட வேண்டுகிறோம். 25-3-1978, சென்னை-28 தமிழ்க்கனி பதிப்பகத்தார்.