________________
2 ין 44 தொடங்கினாள். 'அத்தான் ! போதும் நான் செய்த கலைத்தொண்டு !! என்று கதறினாள். யில், இராசேந்திரன் அவளை இறுக அணைத்தவாறு ஆறுதல் மொழி “பஞ்சவன் மாதேவி ! கலைத் தொண்டினைப் பழிக்காதே ! எவனோ ஒரு கலைஞன் செய்த தவற்றுக்காகக் கலையின் மீதே வெறுப்புக் கொள்ளலாமா ? பாவம்; இனியன் தெரியாமல் செய்த. பிழைதான் இது ! அவனை மன்னித்துவிடலாம்! இந்த உரையாடல் இனியனைத் தட்டி எழுப்பியது. அவள் யார்? பஞ்சவன் மாதேவியா? அவள் சாமுண்டி இல்லையா ? சாரப்பள்ளம் அழகியின் மகள் இல்லையா ? பஞ்சவன் மாதேவி ! பஞ்சவன் மாதேவி !! இராசேந்திரன் மனைவி ! இராசராசனின் மருமகள் !! அய்யோ ! என்ன தவறு செய்துவிட்டோம் !! இனியனுக்கு இப்போது எங்கு நிற்கிறோம் என்றே புரியவில்லை! அவன் செத்துக்கொண்டிருக்கிறான் !! அவனுக்கே தெரியவில்லை ! வந்து இராசராசன் அழுதுகொண்டிருக்கும் மருமகளிடம் "பஞ்சவன் மாதேவி! என்னுடைய கலை ஆசையை நிறைவேற்று வதற்கு உன் கணவன் இராசேந்திரன் இட்ட கட்டளையை எனக் காக ஏற்றுக்கொண்டு நீ செய்த தியாகத்தை நான் என்றும் மறவேன். உங்களுக்குத் துணையாக இருந்து உதவிய கிழவி அழகியை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை, அவள் உன்னைச் சிற்பக் கூடத்திற்கு அனுப்பியது மட்டுமல்ல; கண்ணுங் கருத்துமாக இருந்து உன்னைப் பாதுகாத்தும் வந்திருக்கிறாள். நேற்றைய தினம் அவள் கொடுத்த செய்திக்குப் பிறகுதான் சிற்பி யின் மீது சந்தேகமுற்ற நாங்கள் இன்று இங்கு வந்தோம். உனக்கு நாங்கள் அளித்த தொல்லைக்காக எங்களை மன்னித்துவிடு! என்று கண்ணீர் பொங்கக் கூறியதும், "சக்கரவர்த்தி ! அப்படிச் சொல்லாதீர்கள் !" என்றவாறு அரசரின் காலில் விழுந்து வணங் கினாள் பஞ்சவன்மாதேவி ! "யார் யாரை மன்னிப்பது ?” என்று அவள் அரசரைப் பார்த்துத் தேம்பும் குரலில் கேட்டாள். "நாம் எல்லாரும் சேர்ந்து சிற்பி இனியனை மன்னித்து விடுவோம்." என்றவாறு அரசர் அவன் நின்ற பக்கம் திரும்பினார்..