பக்கம்:அரும்பு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரிய இடத்துப் பெண் 'குமுதா ! அவளுக்கு அவன்தான் அமுதா ? என்று நினைத்த. வாறோ என்னவோ ஊஞ்சலில் அமர்ந்தார் உலகநாதர். 'GJ GOT, வேலையெல்லாம் முடிந்ததா?" என்று கேட்டபடி கண்ணம்மா பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் ; ஊஞ்சல் வேகமாக ஆடிற்று. உலகநாதரின் உள்ளத்தின் அசைவை அது வெற்றிகொண்டதாக அவருக்குத் தோன்றவில்லை. கண்ணம்மாவின் கரங்கள் உலக நாதரின் உடலில் நகர்ந்துகொண்டிருந்தன. அவள் அவரது தோள்களை அனிச்சக் கைகளால் அழுத்திப் பிடித்தபோதுகூட ஆனந்த ஒளி இதயப் படுத்தாவில் விழவில்லை. உலகநாதரின் எண்ணங்கள் ஊர்க் கடைசியிலுள்ள குப்பத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன ; கண்ணம்மா அவருக்குப் பொன்னம்மாவாக விளங்குவாள். அவளது மிருதுவான ஸ்பரிசம், அவரது சிந்தனை யைச் சிதற அடிக்கும் சிரிப்பு, அவரைச் சொர்க்க லோகத்திற்கு இட்டுச் செல்லும் சொகுசான லீலைகள் இவைகளில் சொக்கிக் கிடப்பார். - ஆனால், அவர் அன்று கண்ட காட்சி மட்டும் அவருக்கு வேப்பங் காயாக இருந்தது. "JGST QILD GIT GOT LOIT. . . . . . . இருக்கீங்க ? என்று கேட்டுக்கொண்டே உலகநாதரின் முகத்தைத் திருப்பினாள் கண்ணம்மா. கண்ணம்மாவின் விரல் பட்ட மாத்திரத்தில் காந்தத்தோடு தொடரும் இரும்பு போலக் கழுத்தைத் திருப்பும் உலகநாதர் அன்று முரட்டுத்தனமாக, முகத்தை அசைக்காம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/52&oldid=1699693" இலிருந்து மீள்விக்கப்பட்டது