பக்கம்:அரும்பு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

47 லேயே இருந்துவிட்டார். கடைசி வரையில் பார்த்துவிடுவதென்ற முடிவில் கண்ணம்மா ஊஞ்சலைவிட்டுக் கீழே இறங்கினாள். உலக. நாதரின் உந்தலினால் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல் கண்ணம்மா வைக் கீழே தள்ளிற்று. கண்ணம்மா கீழே விழுந்தாள். அடி அவ்வளவாக இல்லை. ஆனாலும் எவரெஸ்ட் சிகரத்திலிருந்து வழுக்கி விழுந்தவள்போல வேதனையைக் கொட்டினாள். உலகநாதருக்குக் கருணை பிறந்தது. ‘"கண்ணம்மா !" கண்ணம்மா!" என்று கூறிக்கொண்டே அவளைத் தூக்கினார். மீண்டும் ஊஞ்சல் ஆட ஆரம்பித்தது. உலகநாதரும் கண்ணம்மாவும் இன்பபுரிப் பிரயாணத்தை ஆரம்பித்தனர். உலகநாதர்! ஆமாம் ; 'மண்டிக்கடை மன்னர்' என்று கூடப் பட்டஞ் சூட்டுவார்கள், மகாநாடு கூட்டினால். அவ் வளவு பெருத்த வியாபாரி. கண்ணம்மா! அவள் குடும்பமும் அவருக்குச் சளைத்ததல்ல. செல்வமும் செல்வமும் கைகோத்துக் கொண்டன. பணமும் பணமும் உராய்ந்துகொண்டன. நான்கு, வருடங்கள். உலகநாதர் கண்ணம்மா திருமணமாகிக் கழிந்த ஆண்டுகள் அவை. உலகநாதர் சற்றுத் தடித்த தோலர். ரோசமில்லாக் காரணத். தாலல்ல ; உடற்கூறுதான் அப்படி ! கண்ணம்மா ரோஜா மலர். அவளை இவருக்குக் கட்டினார்கள். அதைப் பற்றி உலகம் பேசாம லில்லை. பணக்காரர் வீட்டுப் படிக்கட்டுமேல் பாமரர் பேச்சு ஏறுமா ? கண்ணம்மாளுக்கு வாழ்க்கை கசப்பாகத்தானிருந்தது. ஆனால், அவளாகத் தயாரித்துக்கொண்ட திட்டம், முறிந்த வாழ்வை உயர்த்திற்று ; கூனலை நிமிர்த்திற்று. உலகநாதர் வீட்டு வண்டிக்கார வீரன் கட்டழகன். கண்ணம்மாவின் வலை யில் வீரன் மாட்டினான். இது அவள் குற்றமா ? அல்லது உலக நாதரின் வெம்பிப்போன அழகின் குற்றமா ? இந்த விசாரணைக்கு. வீரன் போகவில்லை. உதட்டில் தடவப்பட்ட தேனை நக்கினான் ; சுவைத்தான்; தேனடையைத் தேடினான். ருசி கண்ட பூனை உறியைத் தாவா மலிருக்குமா? கண்ணம்மா, 'கற்போடு நடக்க வேண்டுமே' என்று குழம்பிக்கொண்டிருந்தபோது, “சாகும்போது என்ன சங்கரா வேண்டியிருக்கு! என்றான். உலகநாதருக்கு. உபசரிப்புக் குறையவில்லை. அன்பை அவருக்கு அர்ப்பணிப்பதாகக் கண்ணம்மா கூறினாள். அந்த நாடகத்தில் உலகநாதரின் ராஜ பார்ட் கம்பீரங்கொண்டது. ஆனால் ஸ்திரிபார்ட் போட்டிருப் பது ஆண் என்றுகூட ஐயமுறாத நிலை அவருக்கு ! கண்ணம்மாவின் கன்னங்களைச் சுவைக்க நேரமிருந்தது அவருக்கு ! கருத்தைச் சோதிக்க நினைப்பில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/53&oldid=1699694" இலிருந்து மீள்விக்கப்பட்டது