பக்கம்:அரும்பு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 சீமான் வீட்டுச் செல்வி சின்னப் புத்திக்காரியாக இருப்பாள் என்று அவர் கருதத்தானில்லை. வீரனுக்கல்லவா அவளின் விரகதாபம் ! உலகநாதருக்கு மஞ்சம் உண்டு; கொஞ்சல் உண்டு ; அவ்வளவும் வீரனுக்குப் போக எஞ்சியதுதான்! தெரியும் ஆனால், உலகநாதரிடம் நடனமுண்டு ; நெளிவு உண்டு; ஆனால், அந்தக் கேளிக்கைக்கு வாடிக்கைக்காரன் வண்டிக்கார வீரன்தான் ! பாடல் உலகநாதரிடம் ஊடல் உண்டு ; கூடல் உண்டு ; உண்டு ; ஆனால் அப்போதும் கண்ணம்மாவுக்கு வீரனைக் காண வில்லையே என்ற வாடல் உண்டு ! உலகநாதரிடம் உல்லாசம் பரிமாறுவதுண்டு ; சல்லாபம் உண்டு ; எல்லாமுண்டு ; ஆனால் வீரனிடம் நடிப்பதற்கு இவை ஒத்திகைகள் வண்டிக்கார வீரன் பலே ஆள் ! கட்டுமஸ்தான உடல்; உழைத்து உழைத்துப் பக்குவம் பெற்ற உடற்கட்டு ; முகத்திலே எப்பொழுதும் ஓர் அலாதியான தேஜஸ் ! 'ஹை' என்று அவன் மாடுகளை அதட்டுவதே ஒரு சங்கீதமாயிருக்கும். அலட்சியமாகப் பார்வையைச் சிந்தும்போது அவன் ஒரு பாட்டாளி என்பதையே மறந்துவிடுவான். அவனது சிரிப்பிலே ஒரு தனி அழகு தாண்டவ மாடும். அரும்பிய சிறு மீசைகள் ; அவசரத்தையே காட்டிக் 'கொண்டிருக்கும் அசைவுகள் ! போதாவா? கண்ணம்மாவின் கருத்தைக் கிளற இவை கண்ணம்மா கற்போடு நடக்க வேண்டுமென்றுதான் முதலில் கருதினாள். ஆனால், உலகநாதரின் விகார ரூபம் அவள் பிடிவாதத்தை உடைத்தெறிந்தது. வீரனின் ‘கணீ’ரென்ற அதட் டல் காளை மாடுகளை அதிரச் செய்தது. அதே சமயத்தில் அந்த ஒலி கண்ணம்மாவுக்குக் கீதமாக இருந்தது. வண்டிக்காரரின் முறைப்பு, வெறித்த வண்டி மாடுகளுக்கு உதறலைத் தந்தது. அதே சமயத்தில் கண்ணம்மாவுக்கு அது கம்பீரப் பார்வையாக இருந்தது. அவனது சவுக்கடிகள் மாடுகளுக்கு மனவே தனையைக் கொடுத்தன. அந்தச் சப்தத்தில் அவனது ஆற்றல் ஒளிந்து கிடப் பதாகக் கண்ணம்மா கருதினாள். கண்ணம்மாவின் அணைப்பு வீரனுக்கு ஆனந்தமாகத்தானிருந்தது. ஆனால், அவன் ஆண் வர்க்கமல்லவா ? சுவைக்காததைச் சுவைத்தான் ; கிடைக்காதது .கிடைத்தது ; முடியாதது முடிந்தது ; எஜமானியின் ஆசைக்குரிய வன்தான்! வீரனுக்கும் கண்ணம்மாவுக்கும் இருந்த தொடர்பு வரவர தாட்சண்யமாக மாறிற்று. உறியில் தாவும்போது பயப் படாத பூனை உறியை அடைந்ததும் பயப்பட்டது போல - சுவரைத் துளைத்தபோது அஞ்சாத திருடன் வீட்டில் நுழைந்தவுடன் அஞ்சு வது போல-வீரன் கண்ணம்மாவின் கட்டிலில் அகப்பட்ட பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/54&oldid=1699695" இலிருந்து மீள்விக்கப்பட்டது