________________
49 நடுங்கினான் ஊருக்காக ! உலகநாதர் வீட்டு விஷயம் ஊரில் பரவிற்று. ஊர் தூற்றுமோ ? எஜமான் அறிந்தால் என்ன ஆகுமோ ? என்ற கேள்விகள் வீரனைத் திக்கு முக்காட வைத்தன. வண்டியுடன் மாடுகளுண்டு, வண்டிக்காரன் வீரனுண்டு என்ற நிலை ஏற்பட்டது பின்னால் ! கண்ணம்மாவைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவான். முகாந்தரம் தெரியாமல் கண்ணம்மா விழித்தாள். கடிதம் எழுதலாம் என்று நினைத்தாள் ! நினைப்பு இருந்தது, நேரமிருந்தது, தாள் இருந்தது, பேனா இருந்தது. ஆனால், வீரனுக்குக் கல்வி வாடை இல்லையே! கண்ணம்மா கலங்கிய உள்ளத்துடனே காலத்தைக் கடத்தினாள். வீரனின் ஊடல் தீரும்வரை உலகநாதரிடம் உல்லாச நாடகத்தின் ஒத்திகைகளை நடத்தி வந்தாள். அப்போதுதான் ஒரு நாள் உலகநாதர் - கண்ணம்மா ஊஞ்சல் ஆட்டம் நடைபெற்றது. கண்ணம்மா கிளறிக் கிளறிக் கேட்ட பிறகு உலகநாதர் வாயைத் திறந்தார். உலகநாதர் பண்ணையில் வேலை பார்க்கும் உத்தண்டி என்ற தலையாரி ஒரு கிழவன். அவனது மகள் குமுதா. குமுதம் என்ற பெயரின் சுருக்கம் குமுதா. உத்தண்டியின் தங்கை மகன்தான் -வீரன். குமுதாவின் அத்தான். குமுதாவும் வீரனும் குலவிக் கொண்டிருந்ததை உலகநாதர் கண்ட அன்றுதான் ஊஞ்சல் உரை யாடல் நிகழ்ந்தது. உத்தண்டியின் மகளிடம் உலகநாதருக்கு மோகம். கண்ணம்மா தரும் காதல் ரசத்தைவிடக் குமுதாவின் கொவ்வை இதழ்களில் கசியும் இன்பம் அதிக விலை என்று புள்ளி போட்டார். இவ்வள வுக்கும் அந்த மகானுபாவன், மாதிரி பார்க்கக்கூட இல்லை. கண்ணம்மா, போனால் போகட்டும், கட்டிய புருஷனல்லவா என்று ஊருக்குப் பயந்தோ, அல்லது சொத்துக்கு ஆசைப்பட்டோ உலக நாதரிடம் ஆசை காட்டி வாழ்ந்ததை, அவர் அன்பின் சிகரம் என்று நினைத்துவிட்டார். தமது அழகில் ஈடுபட்ட மயக்கம் என முடிவுகட்டிவிட்டார். கண்ணம்மா தம்மையே கடவுளாக நினைத்து விட்டதாகக் கனவு கண்டார். கடவுளுக்கு நைவேத்தியம் என்று கூறிப் பொங்கல் பள்ளயம் பாவாடை போட்டு, அதைக் கருத்துக்கேற்ற கனகசுந்தரிகளுக்கு ஊட்டுகின்ற பூசாரியைப் போலவே, கண்ணம்மாவும் தன்னைக் கணவனுக்கு நைவேத்தியம் செய்து இன்பத்தை வீரனுக்கு வழங்கி வந்தாள். இதை அந்த இளித்தவாயர் அறியவில்லை. பாவம்! கடவுளாவது கற்சிலை ; கண்ணில்லாதவர் ! இந்தக் கணவனுக்கோ கருத்துமில்லை ; கவனிப்புமில்லை. இந்தக் கடவுளுக்குக் காட்டப்பட்ட பிரசாதத்திற்கு வீரன் நாக்கைத் தீட்டிக்கொண்டிருந்தான். அது ஒரு காலம் ! ஆனால் க.க.4