________________
50 அதே வீரன் தன் அத்தை மகள் குமுதாவிடம் எஜமானியம்மாள் தனக்குக் கற்பித்த பாடங்களை நடத்த நாள் எண்ணி வந்தான். குமுதாவிடம் ஆவலைக் கொட்டியிருந்த உலகநாதர் உள்ளம் வெதும்பினார், உடல் இளைத்தார். குமுதா குடியானவன் வீட்டுப் பெண்தான். அலங்காரமில்லா விட்டாலும் அழகி; 'மேக்கப்' இல்லாவிட்டாலும் மேனியில் ஒரு லலித களை; சுருக்கமாகக் கூற வேண்டுமானால், குமுதா ஒரு குளிர் தென்றல் ! அவள் வீரனுக்குக் கிடைக்க அவனுக்கு உரிமை இருந்தது. அத்தான் என்ற முறையின் காரணமாக மட்டுமல்ல ; அவன்தான் அவளுக்கும் சத்தான பொருள். வீரன் எஜமானியம்மாளின் இஷ்டத்திற்குரியவன் என்ற செய்தி குமுதாவுக்குத் தெரியாது. கொழுந்துப் பெண்தானே அவள் ! வீரனை நம்பினாள், வீரனும் வாழ்க்கையின் துணையாக அவளை ஏற்றுக்கொள்ளத் துணிந்தான். இதற்கிடையில் உலகநாதர் நின்றார், குமுதாவை ருசி பார்க்கக் குள்ள நரியாக ! 'குமுதா எப்படியும் கிட்ட வேண்டும்' - இந்த எண்ணத்தைக் கண்ணம்மாவிடம் கக்கிவிட்டார். ஆம்! ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தபோதுதான் உள்ளத்தைத் திறந்தார். ஒளித்து வைத்திருந்ததை எடுத்து நீட்டினார். “சண்ணம்மா என் கண்ணல்ல.... நான் உன்னை அலட்சியப்படுத்துவதாக நினைக் காதே! எப்படியாவது ஒரு நாள்... குமுதா என் படுக்கையை அலங்கரிக்க வேண்டும். இதை நீதான் செய்ய வேண்டும். தயவு செய். உன் தாளைப் பிடிக்கிறேன். இரங்கமாட்டாயா?" என்று வேண்டினார். அதற்குப் பிறகு நடந்தது என்ன ? அந்த வரலாற்றை ஒவ் வொருவரும் கூறுகிறார்கள், கேளுங்கள் ! உத்தண்டி : பல் முளைத்த நாள் முதல் நான் பண்ணைக்காரர் வீட்டில்தான் அடிமை வேலை பார்க்கிறேன். பரம்பரை பரம்பரையாக என் பாட்டன் பூட்டன் எல்லோருமே அடிமைகள்தான். என் தகப்பனுக்குஎன்னைச் சுதந்திர மனிதனாக ஆக்க எங்கிருந்து புத்தி’ தோன்றும்? உலகநாத முதலியார் என்னைவிட எத்தனையோ வயது இளையவர்.நான் அந்தப் பண்ணையில் மாடு மேய்க்கும்போது அவர் பிறக்கக்கூட இல்லை. இப்போது உலகநாதர் என்றாலே அடி வயிற்றில் 'பகீர்' என்கிறது. இத்தனைக்கும் மண்டிக்கடை ஆசாமி தான்.ஆனால், லட்சுமி அங்கு விளையாடுகிறாள். அங்கேயே வாசம் செய்கிறாள். அவர் பார்த்து ஒழிக்க வேண்டுமென்றால் ஒழித்துக் கட்டிவிடலாம். என் வீடு, மனை, தோட்டம் எல்லாம் அவரிடம்