________________
52 என்னால் மறுக்கவே முடிய மறுத்திருந்தால் மறுநாளே பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். வில்லை ; மறுக்க தைரியமும் இல்லை. அவருடைய கடனை அடைத்தாக வேண்டும். நான் 500 ரூபாய்க்கு அப்பொழுது எங்கே போவேன்? இந்தப் பாழுந் தெய்வங்கள் என்னை அப்படியா வைத்திருந்தன ? அவைகளுக்குத்தான் என்னைப் பற்றிக் கவலையே கிடையாதே! "உன் மகள் குமுதத்துக்கு மாதம் 20 ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன். கவலைப்படாதே. அவளுக்கு இங்கு ஒரு கஷ்ட மும் இருக்காது. கண்ணம்மாவோடு குஷாலாக இருக்கலாம். வேலையும் அதிகமில்லை" என்று மறுபடியும் உலகநாதர் உபந்நி யாசத்தை ஆரம்பித்தார். கிராமத்திலே பணத்தைக் கண்டால் பகவானைக் கண்டது போலத்தானே! அதுவும் என் போன்ற தலையாரிகளுக்குக் கேட்கவா வேண்டும் ! கோபாலகிருஷ்ணபிள்ளை மகள் பள்ளிக்கூடத்திலே 10 கிளாஸ் படிச்சுப்பிட்டு வாத்தியா ரம்மா வேலை பார்த்து மாதம் 20 ரூபாய் சம்பாதிக்கிறாள். ஒன்று மில்லாமல் என் குமுதாவுக்கு 20 ரூபாய் சம்பளம் என்றதும் எனக்குச் சபலம் தட்டிற்று ; சிறிது ஆசையும் ஏற்பட்டது. அவ ளுக்கு மாதா மாதம் வரும் இருபது ரூபாயை அப்படியே மீத்துப் புருஷன் வீட்டுக்குப் போகும்போது சீதனமாகக் கொடுத்தனுப்பலா மென்று திட்டங்கள் போட்டுவிட்டேன். உலகநாதரின் உத்தரவு வுக்குக் கீழ்ப்படிந்தேன். இந்த அபிப்பிராயத்தை என் குமுதாவிடம் கூறினேன். குமுதா குழந்தை மனம் படைத்தவள் அல்லவா ? என்னைப் பிரிந்து வேறு ஒரு வீட்டில் வேலை செய்யத் தயங்கினாள். 'இந்த ஊர் தானே அம்மா ! ஏன் பயப்படுகிறாய் ? நான் உன்னை அடிக்கடி எஜமான் வீட்டிலே வந்து பார்க்கிறேன், பயப்படாதே" என்று சப்பைக் கட்டுகள் கட்டினேன். அவளும் உலகநாதர் வீட்டுக்கு வேலைக் காரியாகப் போகச் சம்மதித்தாள். அதன்படி அங்குச் சென்று வேலையிலும் அமர்ந்தாள். பிறகுதான் நான் செய்த தவற்றை உணர்ந்தேன். குமுதாவைக் குழியில் போட்டுப் புதைத்த குருட்டுப் புத்திக்காரனானேன். இன்னும் சொல்லட்டுமா ?குமுதா ஒருநாள் உலகநாதர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்திருந் தாள். நான் திடீரென்று அங்குப் பிரவேசித்தேன். குமுதா கண்களைத் துடைத்துக்கொண்டு அவசரமாக எழுந்து, "அப்பா!" என்று கூவிக்கொண்டு என்னிடம் ஓடி வந்தாள். ஏன் குமுதா, அழுகிறாய்?" என்றேன். என் மனம் பட்ட பாட்டை ஈசன்தான் அறிவான். குமுதா தேம்பினாள். அழுது அழுது அவள் முகம் வீங்கியிருந்தது. கண்கள் செக்கச்செவேலெனத் தோன்றின. என் கால்கள் நடுங்கின. கைகள் உதறலெடுத்தன. குமுதா பேசத் தொடங்கினாள். ஆனால், வாய் குளறிற்று. சில வார்த்தைகள் ""