________________
57 வந்து குவிந்தன. கட்டில்களென்ன, கம்மல்கள் என்ன, ஏதேதோ வழங்கினார்கள். வழக்கத்தை விடாமல் செய்துவிட் டார்கள் ; அவ்வளவுதான். அவர்கள் அள்ளி அள்ளிக் கொடுத்த அவ்வளவும் எனக்குத் தேவையில்லை. என் கருத்துக்கேற்றவரைத் தேடித் தராத அந்தப் 'பெற்ற பேய்கள்' எனக்கு எதை வாரிக் கொடுத்தால்தான் என்ன ? ஓர் ஆணழகரை மட்டும் எனக்குத் துணைவராகச் சேர்த்திருந்தால் போதுமே! சீதனமா வேண்டும். எனக்குச் சீதனம் ! பார்த்தேன். வண்டிக்கார வீரனின் வாட்டத்தைப் போக்க முன்வந்தேன். வெற்றி பெற்ற வீறாப்பில் பெருமூச்சு விட்டேன். அகழ் பல கடந்து, அரும்பாடுபட்டு, அந்நியனுடைய கோட்டை யைக் கைப்பற்றியது போல ஆனந்தங்கொண்டேன். இதய வீதியில் எண்ணப் பட்டாளம் ஜெயபேரிகை முழங்கிச் சென்றது. குனிந்துகிடந்த என் இளமை கொக்சரித்துக் கொடியேற்றிப் புறப் பட்டது. "என்னடி. வேசி ! அளக்க ஆரம்பித்துவிட்டாய்” என்று ஆத்திரப்படுகிறீர்களா ? சற்றுப் பொறுங்கள். இதோ பாருங்கள், வீரனுக்கும் உலகநாதருக்கும் உள்ள வித்தியாசங்களை! உலகநாதரிடம் இளமை மட்டுமிருந்தது. வீரனிடம் அந்த இளமைக்கேற்ற அழகு இருந்தது ! உலகநாதர் உருட்டுச் சட்டிப் பொம்மை ; வீரன் வடிவழகன் ! உலகநாதர் உன்மத்தர் ; வீரன் விவேகி ! உலகநாதரிடம் செல்வம் மிகுந்தது ; சிங்காரமில்லை ! வீரன் ஏழைதான்; ஆனால், எழில்மிக்கவன். எனக்கு வேண்டி யது அதுதானே ! உலகநாதரின் குரலில் ஒரே கரகரப்பு; வீரனின் தொனியில் வீணை கிளப்பும் ஒலி! உலகநாதரின் கண்களுக்கு ஆந்தை அருமையான உதாரணம் ; வீரனின் கண்களோ என் விலாவைக் குத்தி வேதனை கிளப்பிய வேல்கள் ! உலகநாதரின் பல்வரிசை பார்க்கப் பயங்கரம் ;. வீரனின் பற்களோ முத்துக் கோவை ! அவ்வளவு ஏன் ? வீரன் என்னை இந்திர விமானத்தில் இட்டுச் சென்றான், இன்பபுரியில் சுற்றுப் பிரயாணம் செய்ய ! வீரனுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதை உலகநாதர் அறியவே இல்லை. அவர் அறியாதபடியே நான் நடந்துகொண் டேன். அவரது ஆசை மனைவிபோல நடந்தேன். அவரைக் கடவுளாகக் கருதுவதாகக் கூறினேன். பாதங்களைக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். பாசமுள்ள பத்தினிபோல் பாசாங்கு செய் தேன். உலகநாதர் என்னை நம்பியே இருந்தார். நாடகமும் நான் ஆடாவிட்டால் அவர் என்னை நம்புவாரா? தலையை வலிக்கிறது என்று சொல்வார் ; எனக்கே வலி ஏற்பட்ட தாக வருத்தத்தை வரவழைத்துக்கொள்வேன். அவர் நன்றாக ஏமாந்துவிடுவார். ஏமாறட்டுமே, எனக்கென்ன ! இவ்வளவு