________________
59 செய்ய ஆரம்பிப்பார். அவர் அறிந்துகொள்ள முடியாத நோய் எனக்கு ! அதை நீக்க அவர் கொண்டுவந்து தர முடியாத மருந்து ஒன்று இருந்தது. அதை அவர் எப்படி அறிவார் பாவம் ! இந்த நிலையிலே ஒரு சில மாதங்கள் ஓடின. என்னுடன் பட்சமாயிருந்த உலகநாதரும் திடீரென்று மாறி விட்டார். எப்பொழுதும் சிந்தனை ; எப்பொழுதும் வெறுப்பு; எப்பொழுதும் கடு கடுப்பு ! சாதாரண வேளையிலேயே என் நாயகரைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். அதுவும் இந்த நிலைமையிலே எப்படி இருப்பார் என்று நான் சொல்லவும் வேண்டுமா ? அவர் அப்படி ஒரேயடியாக மாறிவிட்டதற்கு எனக்குக் காரணம் புரியவில்லை. ஒரு வேளை வீரனுக்கும் எனக்கும் உள்ள ‘இரகசியம்' அம்பலமாகி விட்டதோ என்று நடுக்கமுற்றேன். அல்லது வேறு ஏதாவது புதுவித வியாதியோ என்று ஐயமுற்றேன். நான் எந்த முடிவுக் கும் வர முடியவில்லை. ஒரு பக்கம் வீரன் இல்லா வாழ்வு; இன்னொரு பக்கம் உலகநாதர் பற்றிய ஆராய்ச்சி ! இரண்டுக்கும் நடுவில் நின்று தவித்தேன். உலகநாதரிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். அவர் மௌனமே சாதித்தார். ஒருநாள் இரவு 9 மணி இருக்கும். உலகநாதர் எங்கேயோ போய்விட்டு வீட்டுக்கு வந்தார். ஊஞ்சலில் உட்கார்ந்தார். நானும் அவர் அருகிலே அமர்ந்தேன். அவருடைய முகத்தைக் காணச் சகிக்கவில்லை. அந்த அகண்ட சச்சிதானந்த விழிகளைப் புருவத்தின் பக்கம் ஏற்றி எங்கேயோ யோசனையை ஓட்டிக்கொண் டிருந்தார். நான் நடிக்க ஆரம்பித்தேன். ஊஞ்சலிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். உண்மையாக அல்ல, உலகநாதரை ஏமாற்ற. உலகநாதர் என்னை வாரி எடுத்துத் தடவிக் கொடுத் தார். அந்த ஸ்பரிசத்தால் என் வலி நீங்கும் என்று அவர் எண்ணியிருக்கலாம். 'வீரன் இருக்கவேண்டிய இடத்தில் இந்த வீ.ணனா ?' என்று என் மனம் துடித்துக்கொண்டிருந்ததை அவர் எப்படி அறிவார் ? மறுபடியும் ஊஞ்சலில் உட்கார்ந்தோம். ஊஞ்சல் அசைந்தது; உலகநாதரும் பேச்சை ஆரம்பித்தார். எங்கள் பண்ணையிலே தலையாரி உத்தண்டி என்று ஒரு கிழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு ஒரு மகள். அவள் பெயர் குமுதம். அந்தக் குமுதம் அழகிதான். அந்தக் குமுதத்தின் மேல் என் பிராணபதிக்கு மோகம் ஏற்பட்டுவிட்டது. என்னைத் திருப்திப்படுத்தமுடியாத அந்த அழகு துரை, குமுதத்தின்மேல் பாய்ந்துவிட்டார். பணக்காரரல்லவா? பார்த்த பெண்களை எல்லாம் காதலிப்பதுதானே பணக்காரத் தத்துவம். குமுதத் தோடு கொஞ்சவேண்டுமென்று என்னிடம் கூறினார். தாராள மாகச் செய்வதுதானே, என்று என் விருப்பத்தை வெளியிட்டேன். அதற்கு ஒரு தடங்கல் இருக்கிறதென்றார். என்ன தடை என்று