பக்கம்:அரும்பு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 நான் கேட்டேன். அவர் அதைச் சொன்னார். வீரன் என்னை மறந்து விட்டதன் இரகசியத்தை அப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். உலகநாதர் விரும்பிய குமுதாவுக்கு ஓர் அத்தான் உண்டு. அவன்தான் என்னை அடிமைகொண்ட அன்பன் வீரன்! குமுதா வுக்கும் வீரனுக்கும் காதலாம். இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டார்களாம். கல்யாணமும் சீக்கிரம் முடியப்போகிறது" என்று உலகநாதர் கூறினார். அந்தச் சமயத் தில் என் முகத்தில் தோன்றிய கீறல்களை உலகநாதர் பார்த்திருந் தால் ஆச்சரியப்பட்டிருப்பார். நான் இறந்துபோய்விட்டதாகவே கருதினேன். ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, “வீரனுக்கும் குமுதாவுக்கும் காதல் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டேன். குடியானவத்தெரு கொல்லைக்குளத்து வாய்க் கால் ஓரத்தில் இருவரும் ரகசியம் பேசிக்கொண்டிருந்ததைத். தாம் கண்டதாக என் கணவர் கூறினார். அதோடு உலகநாதர் நிற்கவில்லை. "கண்ணம்மா ! என் கண்ணல்ல.... நான் உன்னை அலட்சியப்படுத்துவதாக நினைக்காதே ! எப்படியாவது நாள் .... குமுதா என் படுக்கையை அலங்கரிக்கவேண்டும். இதை நீதான் செய்யவேண்டும். தயவு செய்! தாளைப் பிடிக்கிறேன். இரங்கமாட்டாயா ?" என்று கெஞ்சினார், கதறினார், பல்லைக் காட்டிப் பிச்சைக் கேட்டார். எனக்கும் ஒரு யோசனை தோன் றிற்று; அது மிகவும் அருமையான ஒரு யோசனையாகத்தான் முடிந்தது. ஒரு குமுதாவையும் வீரனையும் பிரித்துவிட்டால் மீண்டும் என்னை நெருங்குவான் என்று தீர்மானித்தேன். குமுதாவை உலகநாத ரிடம் அளித்துவிட்டால் அவளிடமே குலவிக் கிடப்பார். வீரனும் நானும் வேறு அந்தப்புரம் அமைத்துக்கொள்ளலாம். அவர் அதைக் கவனிக்க முனையமாட்டார் என்று முடிவுகட்டினேன். ஆகவே, குமுதாவை என் கணவருக்குக் கட்டிவைக்க யோசனை சொல்லிக் கொடுத்தேன். குமுதாவை ஒரு விபச்சாரியாக்குவதன் மூலம் இழந்த வீரனை இழுத்துவிடலாமென்ற தைரியம் எனக்கு! "அடி துரோகி ! நீ கெட்டதோடு இருக்கக்கூடாதா? குமுதாவையுமா அப்படிச் செய்ய வேண்டும் ?” என்று கேட்கிறீர்களா ? அதற்கு. நான் என்ன செய்வேன் ? என் வீரனை அடைய வேறு வழி ஏது ? குமுதா வேண்டுமானால் தன் கற்பின் திறமையைக் காட்டுவது தானே ! மறுநாள் பொழுது விடிந்தது. என் யோசனைப்படி உலகநாதர் உத்தண்டிக் கிழவனைக் கூப்பிட்டு அனுப்பினார். குமுதா வீட் டில் வேலை செய்ய வேண்டும் என்றும், எனக்குத் துணையாகச் சில நாட்களுக்கு இருக்க வேண்டுமென்றும் சொன் னார். கிழவன் சிறிது தடுமாறினான். குமுதாவுக்கு மாதச் சம்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/66&oldid=1699712" இலிருந்து மீள்விக்கப்பட்டது