பக்கம்:அரும்பு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 ஆனால், அந்தக் காரியம்தான் என் தலைவிதியைத் தலைகீழாக மாற்றிய மாபெரும் புரட்சி ! என் சுயநலத்துக்காகக் குமுதாவைக். கொலை செய்தால்தான் என்ன ? குமுதா : வேண்டுமானால் என்னைக் கொலை செய்திருக்கலாம். சந்தோஷத். தோடு செத்திருப்பேன். ஆறிலும் சாவுதான், நூறிலும் சாவு தான். ஆனால், எனக்கு வாழ்க்கையிலே ஆசை ஏற்பட்ட பிறகு. சாகத் துணிவது சாமான்யமாகத் தோன்றாமல்தான் இருந்தது. கண்ணம்மா செய்த வேலை என்னை ஒரு வீராங்கனையாக்கிவிட்டது. சாவோடு விளையாடத் தயாராகிவிட்டேன். 'ஏன் இந்த முடி வுக்கு வந்தாள் குமுதா ?” என்று நீங்கள் சந்தேகப்படுவீர்கள். முதலில் என்னைப்பற்றிய குறிப்பைப் படியுங்கள். நான் உத்தண்டியின் மகள். குழந்தையாயிருக்கும்பொழுதே தாயார் இறந்துவிட்டார். என் குலத்திலே இல்லாத வழக்கமாக எனக்கு ஐந்தாவது வகுப்பு வரையில் கல்வி கற்றுக் கொடுக்கப் பட்டது. அந்த ஆரம்பப் படிப்பை வைத்துக்கொண்டுதான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆனால், எனக்கு ஒரு விருப்பம் இந்தக் கடிதத்தை என் அத்தான் படிக்காவிட்டாலும் யார் கையி லாவது அகப்பட்டு நான் குற்றமற்ற நிரபராதி என்பது ருசுவாகி விட்டால் போதும். உலகத்திலே ஒருவராவது குமுதா குற்ற மில்லாத பெண்' என்று கூறமாட்டார்களா? நான் குறைவாகப் படித்த பெண்தான். படித்திருந்தாலும் பரந்த மனப்பான்மை உள்ளவள். நாகரிகத்தின் நாச வேலைகளால் உள்ளத்தைக் குரங்கைப்போல ஆக்கிக்கொண்ட பெண்களின் இனத்தைச் சேர்ந்தவள் நானல்ல என்பதை நீங்கள் கட்டாயம் நம்பவேண்டும். இந்த உலகத்திலே எத்தனையோ குமரிகள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களாகவே வீணாக்கிக்கொள்கிறார் களே! எனக்கு ஏற்பட்ட நிலைமை நானாகத் தேடிக்கொண்டதல்ல. வீரன் என் அத்தை மகன். அத்தான் படிக்காத ஆள். ஆனால், என் வாழ்க்கைத் துணைவராக இருப்பதற்கு லாயக்குள்ளவர். அவரோடு ஆனந்தமாகக் காலத்தைக் கடத்தலாம் என்று நம்பி னேன். நான் நினைத்ததிலே தவறில்லை. நம்பியதுதான் முட் டாள்தனமாகிவிட்டது. என் தகப்பனார் என்னை வீரனுக்கு மணமுடிப்பதாகக் கூறிய பின்னரே நான் அவரோடு பழக ஆரம்பித் தேன். அதுவரை என் சிந்தனையில் எந்தத் துர் எண்ணங்களும் இடம் பெறவில்லை. அத்தானுடைய அழகுகளைப் பற்றி நான் கூறவே தேவையில்லை. அவருக்கு நான் அடிமையாகிவிட்டேன் என்றால், அந்த ஒரு வார்த்தை போதாதா? அத்தான் என்மேல் வைத்த ஆசை மாறக்கூடாதே என்பதற்கு வேண்டுமானால் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/68&oldid=1699715" இலிருந்து மீள்விக்கப்பட்டது