பக்கம்:அரும்பு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

63 என்னைச் சிங்காரித்துக்கொள்வதுண்டு. வைர ஜோடிப்புகளா எனக்கு இருந்தன? கொல்லையில் கிடக்கும் முல்லையும் தோட் டத்துத் தாழம்பூவுமே எனக்கு ஆபரணங்கள் ; கண்ணாடி வளையல் களைத்தான் என் கைகள் அறியும். எப்படியோ நானும் அத்தானும் ஒன்றுபட்டுவிட்டோம். அவர் என்னை உண்மையாகவே காதலித்தார். அவருக்குக் காதல் என்றால் இன்னதென்று தெரியுமோ தெரியாதோ! என்னை அடிமை யாக்கிக்கொள்ள மட்டும் அவரிடம் ஒரு சக்தி இருந்தது. சதா என் இருதயப் பீடத்திலே அத்தானை அமரவைத்துப் பூஜித்துக்கொண் டிருந்தேன். அந்த இடத்திலே யாரும் எட்டிப் பார்க்கவும் முடி யாது. அப்படி இருந்த அதே குமுதாதான் வெட்கமில்லாமல் இந்தக் கடிதத்தை எழுதுகிறாள். நான் கடிதமா எழுதுகிறேன்! இல்லை, கதறுகிறேன் ! கடிதமா இது ! இல்லை, சண்ணீர்த் தேக் கம் ! எழுத்துக்களா இவைகள் ! இல்லை, இதயத்தைப் பொத்துக் கொண்டு பீரிட்டுக் கிளம்பிய இரத்தத் துளிகள் ! அன்றிரவு அய்யோ அதை நினைத்தாலே குலை நடுங்குகிறதே ! என் தகப்பன் ஆசையைக் கெடுக்காமல் உலகநாதர் வீட்டுக்கு வேலைக்காரியாகச் சென்றேன். கண்ணம்மா என்னை அவருக்கு வெள்ளாட்டியாக்க முயன்றாள். ஒருநாள் இரவு அந்தப் பேச்சை எடுத்தாள். புருஷனுக்குப் டெண் தேடும் அவசியம் அவளுக்கு ஏன் ஏற்பட்டதோ எனக்குத் தெரியாது. என் னென்னவோ தளுக்குமொழிகள் பேசினாள். நாசூக்காக என்னை நடத்தினாள். வெட்டப்போகிற கடாவுக்கு மஞ்சள் தெளித்து மாலை போடுகிறாள் என்பதை நான் முதலில் புரிந்துகொள்ள வில்லை. விஷயத்தை உணர்ந்து விம்மினேன். வீரனிடம் அதைச் சொல்லித் தப்பித்துக்கொள்ளத் திட்டம் போட்டேன். வீரனைக் காணவே இல்லை. அப்பா வந்தார். அவரிடம் விஷயத்தை முழு வதும் சொல்ல முடியவில்லை. அதற்குள் எஜமானி கண்ணம்மா கூப்பிட்டுவிட்டாள் ; காரியம் மிஞ்சிவிட்டது. அன்றிரவு மணி பத்து இருக்கும்! உலகநாதர் ஊரில் இல்லை என்று கண்ணம்மா சொன்னாள். எனக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. சாலையில் எப்படியாவது என் வீட்டுக்கு ஓடிவிடலா மென்று தீர்மானித்துச் சந்தோஷப்பட்டேன். கண்ணம்மா அப்பொழுது எனக்கு ஒரு கட்டளையிட்டாள். சாதாரண வேலைதான் ; அதுதான் சதியாக முடிந்தது! புலியின் அகண்ட வாய்க்குள்ளே ஒரு பிள்ளையைத் தவழ்ந்து செல்லும்படி ஆணை பிறந்தது. “வெள்ளிக்கோப்பை அந்த அறையிலே இருக்கிறது. அதை எடுத்துவா, குமுதா !” என்றுதான் கண்ணம்மா கூறினாள். நான் அதை எடுத்துவர அறையில் நுழைந்தேன். திடீரெனக் கதவுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/69&oldid=1699716" இலிருந்து மீள்விக்கப்பட்டது