________________
அரும்பு .. ஒரு 'திருக்குவளை கிராமத்திற்கே இந்தக் கல்யாணம் மிக மிகப் புதியது ! பழமையிலே ஊறிப்போனவர்கள் ஏராளம் இங்கே ! அறிவுப் பாதையிலே நடைபோட வேண்டுமென்ற ஆசை பக்கம் இழுத்தாலும், இறந்த காலக் கொள்கைகளை விடாப் பிடி யாகப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள் அதிகம் நிறைந்த அழகான சிற்றூர்! அடிக்கடி ஒலித்துக்கொண்டிருக்கும் ஆலயத்து மணி- வான் முட்டும் கோபுரம் - எதிரே சிங்காரத் திருக்குளம் - கரையிலே தென்னைகளும், திண்ணையுள்ள வீடுகளும் - தென்றலுக்கு ஏற்ற வகையில் தெற்கு நோக்கி அமைந்த அக்கிரகாரம் ! - இப்படி யெல்லாம் கலை அழகோடு பழமைக் களையும் நிறைந்திருக்கும்ஊரிலே தான் இந்தப் புதுமையான திருமணத்தை நான் செய்துகொள்ளப் போகிறேன். நண்பா ! சென்னையிலேயிருந்து இந்த ஊர் அதிக தூரம்தான் ! ஆயினும், நாமிருவரும் மிகவும் நெருங்கியவர்களா யிற்றே ! எப்படியும் அலுவலகத்தில் 'லீவு' பெற்றுக்கொண்டு நீ வந்தே தீரவேண்டும் - இது அன்பின் ஆணை !” என்று கடிதத்தை முடித்திருந்தான் ரத்தினம். கோகுலுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நாலைந்து வருடங்களாக எந்தத் திருமண விழாக் களுக்கும் அவன் போனதே கிடையாது. மகிழ்ச்சி பொங்கிடும் அந்த விழாக்களிலே, தான் போய்ச் சோகத்தின் உருவமாக உட்கார்ந்திருக்க அவனுக்கு விருப்பமில்லை.