பக்கம்:அரும்பு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

65 என்னையே அவள் கணவனுக்குக் காணிக்கையாக்குவாள் என்று நான் கருதவில்லை. இனி இந்த விபச்சாரிக்கு ஏன் வாழ்வு ? வைர நகை போட் டறியாத குமுதா வைரத்தையே பொடி செய்து சாப்பிட்டு விட்டாள். ஆம், எஜமானியம்மாவின் வைர மூக்குத்தியைத் தூள் செய்து சாப்பிட்டுவிட்டேன். எந்த எஜமானி என்னை அவளது கணவனின் கட்டிலறைக்கு அனுப்பினாளோ, அதே எஜமானியின் மூக்குத்தி என்னைக் கைலாசத்திற்கும் அனுப்பட்டும். அத்தான் ! என்னை மன்னித்துவிடுங்கள். குமுதா அழுக்குப் பட்டவள் ; களங்கமடைந்தவள். அவளை மறந்துவிடுங்கள் ! மனித சமூகமே! நீ இனிமேலாவது உலகநாதர்களை உற்பத்தி செய்யாமல் இருக்கமாட்டாயா ? கண்ணம்மாக்களைக் காசினிக்கு. அனுப்பாமலிருக்கமாட்டாயா ? அந்த வேண்டுகோளின்மீது என் உயிரை உனக்கு அர்ப்பணிக்கிறேன். என் உடலை மண்ணாக்கு கிறேன். வீரன்: அத்தான் ! அத்தான்!! இப்படிக்கு இறக்கப்போகும் குமுதா. 'அத்தான் ! அத்தான் !" என்ன வேண்டியிருக்கு? அத்தான்!! அந்தப்பாதகி என்னை அப்படியா வஞ்சிப்பது ? படிக்காத முட்டாள் தானே என்ற எண்ணமா அவளுக்கு ! குழந்தையிலிருந்து குமுதா என்றால் எனக்கு அலாதிப் பிரியம். அவளுக்கும் அப்படித்தான். "அப்படிப்பட்ட குமுதாவை ஏண்டா வீரா, பாதகி என்று கூறுகிறாய்?" என்று நீங்கள் கேட்பது சகஜம். அதற்குமுன் என் வரலாற்றைக் கேளுங்கள். என் வரலாறு வேடிக்கையானது. வண்டிபோகும் பாதையைப்போல வளைவுகள் நிரம்பியது. மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் ஏராளம். நான் உத்தண்டி மாமா, உலகநாதர் பண்ணைத் தலையாரி. அவ ருடைய மகள்தான் குமுதம். குமுதத்தை எனக்குக் கட்டிக் கொடுப்பதாக உத்தண்டி மாமா உறுதி கூறியிருந்தார். குமுதாவைக் கல்யாணம் செய்துகொள்வதாயிருந்தால் ஏதாவது சம்பாதிக்கும் வழியைத் தேட வேண்டாமா என்று யோசித்தேன். அதற்காக உத்தண்டி மாமா சிபாரிசு செய்தார். உலக நாதர் வீட்டு வண்டிக்காரனாக அமர்ந்தேன். வண்டிக்கார உத்தியோகத்திற்கு ஊதியம் மாதம் ஐந்து ரூபாய். உலகநாதர் வீட்டிலேயே சாப்பாடு. வண்டிக்காரனுக்கு வாய்க்காத சுகம்' வலுவில் வந்தது. அடிக்கடி எஜமானர் ஊருக்குப் போவார். க.க-5. !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/71&oldid=1699720" இலிருந்து மீள்விக்கப்பட்டது