பக்கம்:அரும்பு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

67 தலையசைத்துவிட்டேன். குமுதாவின் மேலிருந்த அன்பைக்கூடக் கொஞ்சநாள் ஒத்திப்போட்டிருந்தேன். எனக்கும் கண்ணம்மா வுக்கும் - பிறகு கேட்க வேண்டியதில்லை; உலகநாதரைவிட என் பதவி ஒரு படி உயர்ந்ததாக மாறிவிட்டது! காலம் போனதே தெரியவில்லை. மகாராணியின் அன்பை ஒரு குதிரைக்காரன் பெற்றதாக ‘ராஜா பர்த்ருஹரி' நாடகத்திலே பார்த்திருக்கிறேன்; அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? உண்மையாகவே உலகநாதருக்கும் கண்ணம்மாவுக்குந்தான் பெருத்த வித்தியாசம். வண்டியிலே 'சண்டி'மாட்டையும் 'ஜாதி' மாட்டையும் ஒன்றாகக் கட்டி ஓட்ட முடியுமா? எப்படியோ கண்ணம்மாவுக்கு நான் தேவையான பொருளாகிவிட்டேன். அவள் எனது பாதங்களில் விழுந்து கிடந்தாள். ஒரு நாள் கண்ணம்மா என்னிடம் ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தாள். அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அவளை நான் கேட்டேன்.. 'ஒரு மருந்து என்றாள். அதோடு நிற்க வில்லை. "எல்லாம் உன்னால்தான் என்று கூறி உடம்பை லாவக மாக அசைத்தாள். "புரியவில்லையே!' என்று சொல்லி நான் விழித்தேன். பிறகு விவரத்தைச் சொன்னாள். தார்க்குச்சியால் உடம்பில் 'சுரீர்' என்று குத்தியதுபோல் இருந்தது எனக்கு! அவளுக்குக் குழந்தை பிறந்தால் என்னைப் போலப் பிறந்துவிடும். என்ற பயம். இங்கிலீஷ் மருந்துக்கடையில் நான் அந்த மருந்தை. வாங்கிவந்தேன். அதைக் கொடுக்கும்போது கடைக்காரர் என்னை வெறித்துப் பார்த்தார். நான் திரும்பிப் பார்க்காமலே விந்து விட்டேன். கண்ணம்மா அதைச் சாப்பிட்டாள். கர்ப்பத்தைக் கருவோடு தொலைத்துவிட்டோம். இருந்தாற்போலிருந்து என் மனத்தில் ஏதேர் ஒரு புயல் வீச ஆரம்பித்தது. வாழ்க்கை வண்டி: பெரியதொரு பள்ளத்தில் சிக்கிக் கவிழ்வதுபோல் தெரிந்தது. கண்ணம்மாளையும் என்னை யும் பற்றி ஊரில் ஏதேதோ பேசிக்கொள்வதாகக் காதில் விழுந் த்து. பிறகு, கண்ணம்மாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். அவளை நிமிர்ந்து பார்ப்பதுகூடக் கிடையாது. எனது ஆசைகள் எல்லாம் குமுதாவிடம் திரும்பின. குமுதா வைக் கல்யாணம் செய்துகொள்ளும் நாளை எதிர்பார்த்துக் கிடந் தேன். தை மாதத்தில் கல்யாணத்தை முடிக்கப் போவதாக' உத்தண்டி மாமா கூறினார். எனக்கு அடக்க முடியாத ஆனந்தம்! நான் குமுதாவை மனப்பூர்வமாக நம்பினேன். என்னை ஏமாற்ற மாட்டாளென்று எண்ணிக்கிடந்தேன். ஆனால் இலவு கிளியாக ஆகிவிட்டேன். குமுதா உலகநாதர் வீட்டுக்கு வேலைக் காரியாகப் போனாள். போகும்போதுகூட நானும் அவளும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அடிக்கடி தன்னைச் சந்திக்கும் காத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/73&oldid=1699723" இலிருந்து மீள்விக்கப்பட்டது