பக்கம்:அரும்பு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 படிக் கூறினாள். இரண்டு சொட்டுக் கண்ணீர்கூட விட்டாள். எல்லாம் பசப்பு என்பது எனக்கு அப்போது புரியவில்லை. அவளை நம்பி, எஜமானியையே புறக்கணித்து வந்தேன். நான் கண்ணம்மா ஆனால்.. . அன்றிரவு . . . அடாடா ...அதை நினைத்தாலே இரத்தங் கொதிக்கிறது. வண்டி மாடுகளுக்குத் தீனி வைத்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். ஓடி வந்தாள்.என்னைப் பரபரவென்று இழுத்துக்கொண்டு வீட்டுக் குள் போனாள். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. திமிறிக் கொண்டு போகவும் முடியவில்லை. என்ன இருந்தாலும் பழைய கண்ணம்மா தானே ! வீட்டின் தாழ்வாரத்திலுள்ள அறைப்பக்கம் இழுத்துச் சென்றாள். அறையின் ஜன்னலிலுள்ள துவாரத்தின் வழியாக என்னை உள்ளே பார்க்கச் சொன்னாள்; பார்த்தேன். அதைப் பார்த்தபோது என் மனம் பட்ட பாட்டை எப்படி வருணிக்கமுடியும் ? கண்ணம்மா மட்டும் என்னை உடனே இழுத்துக் கொண்டு போய் விடாவிட்டால் அந்த அறை தூள்தூளாகியிருக் கும்; குமுதா என் கையால் இறந்திருப்பாள்! யோக்கியதையைப் "உன் ஆசைக் காதலி குமுதாவின் பார்த்தாயா?" என்று கேட்டாள் கண்ணம்மா. என் நான் என்ன சொல்வது? குனிந்த தலை நிமிரவில்லை. உடல் சூடேறிப் போய்விட்டது. கண்ணம்மா மட்டும் என்னை அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றிராவிட்டால் இரத்தக் கொதிப்பால் மாண்டிருப்பேன். என்னிடம் உயிரை வைத்திருப்ப தாகக் கூறிக்கொண்டிருந்த குமுதா, உலசுநாதருடன் உல்லாசமா யிருப்பதை என் கண்களால் கண்டேன். சத்தியமாகச் சொல் கிறேன், குமுதா ஒரு விபச்சாரி! எந்தக் கண்கள் குமுதாவைக் கனிவோடு பார்த்தனவோ, அந்தக் கண்கள் இரத்த நிறமாக மாறிவிட்டன. எந்தக் கரங்கள் அவளது மேனியைத் தொடத் துடித்தனவே அந்தக் கரங்களே அவளை ஒடித்தெறியத் துடித்தன. கண்ணம்மாவின்சமாதானத்தினால் அடங்கினேன். கண்ணம்மா வுக்கு என் வாழ்க்கையைப்பற்றி இருக்கும் அக்கறை இந்தக் குமுதா வுக்கு இல்லையே ! இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்னை இளிச்சவாயனாக ஆக்கிவிட்டாளே ! இனிக் குமுதாவைவிட ஒரு வேசி உலகத்திலே பிறப்பாளா ? பிறக்க முடியுமா? எனக்கு உயிரை அர்ப்பணிப்பேன் என்றாளே! உலகநாதருக்கு உடலை. விற்றதை நான் நேரில் கண்டேனே, அதற்கு இனிச் சாட்சியா வேண்டும்? மறுநாள் காலையில் குமுதாவுக்குச் சரியான தண்டனை கிடைத் தது. அவள்செய்த குற்றத்தைக் கடவுள் பொறுப்பாரா? தெய்வமே சகிக்காத தவற்றையல்லவா அவள் செய்தாள் ? அதற்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/74&oldid=1699725" இலிருந்து மீள்விக்கப்பட்டது