பக்கம்:அரும்பு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 யுமா ? கண்ணம்மா ! உன்னை நம்பி இருந்தேனே! பெண் பிசாசே ! பாம்பின் விஷத்தையும் நம்பலாம் ! உன் பசப்பு வார்த்தையை நம்ப முடியாதடி! என்னை உனக்குப் பிடிக்கவில்லை யானால் அப்பொழுதே என்னிடம் சொல்லியிருக்கலாமல்லவா? கள்ளி ! பாசமுள்ளவள் போல் நாடகம் ஆடினாயே,பத்திர காளி! உனக்குத் தெய்வம் நல்வழி காட்டுமா? கண்ணம்மா : தெய்வம் காட்டிய வழிப்படிதான் நான் நடக்கிறேன். அகல்யை செய்ததைவிட நான் என்ன அதிக அக்கிரமம் செய்து விட்டேன் ? தாரை செய்ததைவிட நான் செய்த தவறு பெரிதா ? அப்பேர்ப்பட்ட பார்வதியே பிரம்மாவிடம் ஏமாந்துவிட்டாளே! உலகத்தில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களும் - தெய்வங்கள் காட்டிய வழிகள் தானே! உலகநாதர் என்னைக் கோபித்துக்கொண்டிருப்பார். என்னைத் துரோகி என்று கூறுவார் ; விபச்சாரி என்று சொல்வார். எது வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டுமே ! நான்கு வருடங் களாகச் செய்யாத காரியத்தை இப்பொழுது என்ன புதிதாகச் செய்துவிட்டேன் ? வீரனுடன் வெளியூருக்குப் புறப்பட்டுவிட்டதை வேண்டுமானால் புதிய காரியம் என்று சொல்லலாம். உலகநாதர் ஒழுங்காக நடந்துகொண்டாரா, நான் நடந்துகொள்ள ? நான் ஒருத்தி இருக்கும்பொழுது இவருக்கு ஏன் குமுதாமேல் ஆசையும் மோகமும்? அவர்களுக்குத் தரகு செய்ய நானா ஆள்? வீட்டிலேயே இருந்து கொண்டு உலகநாதருக்கு மனைவியாக நடித்துக்கொண்டு வீரன் விருந்தில் நாளைக் கடத்த நான் எண்ணியதுண்டு. அதைக் கெடுத் தவர் என் கணவர் தானே ! கணவன் என்ற பொம்மையாகவாவது அவர் இருந்திருக்கலாம் ;. குமுதாவைக் கோரியதால் அந்தப் பதவியையும் இழந்துவிட்டார், பாவம்! எனக்கு உலகநாதர் மேல் இரக்கம் எப்படிப் பிறக்கும் ? பெண்ணினத்தைச் சேர்ந்த குமுதாவை நான் அந்தப் பாடு படுத்தாவிட்டால் வீரனின் விருந்து கிடைக்குமா ? குமுதா இறந்த காரணம் உங்களுக்குத் தெரியுமா? அன்றிரவு அவள் கற்பழிக்கப்பட்டாள். உலகநாதரின் வெறி யின் முன் அவள் ஒரு பெட்டிப் பாம்பானாள். குமுதாவையும் வீரனையும் பிரிக்க நான் செய்த சூழ்ச்சியில் வெற்றி பெற்றேன். உலகநாதரும் குமுதாவும் ஒரே அறையில் இருந்ததை வீரன் பார்த்தான்; பார்க்கும்படி நான் செய்தேன். மறுநாள் காலை யில் குமுதாவுக்குப் பேதி கண்டது. காலரா என்று எல்லோரும் சொன்னார்கள். அவள் அவமானந் தாங்கமாட்டாது வைரத்தைத் தின்றுவிட்டாள் என்பது எனக்கும் அவளுக்குமே தெரியும்.எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/76&oldid=1699728" இலிருந்து மீள்விக்கப்பட்டது