பக்கம்:அரும்பு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

71 எப்படித் தெரியும் என்று கேட்பீர்கள். என் வைர மூக்குத்தி தூளாக்கப்பட்டுக் கிடந்தது ; அதிலுள்ள வைரத்தைக் காண வில்லை, நான் அந்தச் செய்தியை அப்படியே மறைத்துவிட்டேன். குமுதா சாயங்காலம் இறந்துவிட்டாள். அப்பாழுதும் கல்மனங் கரையவில்லை, வீரன் குமுதாமே ஆத்திரமாக இருந் தானே தவிரக், கொஞ்சங்கூடக் கவலைப்படவில்லை. அவனைக் கவலைப்பட நான் விடுவேனா? வண்டிக் கொட்டகையில் ஒரு கடிதம் செருகியிருந்தது. அது வீரனுக்குக் குமுதாவினால் எழுதப்பட்ட கடிதம் ; அதைக் கடிதம் என்றுகூடச் சொல்ல முடியாது. குமுதாவின் வாழ்க்கைக் குறிப்பை அப்படியே தீட்டியிருந்தாள். பிறந்தது முதல், வைரத் தைச் சாப்பிட்டுச் சாகத் துணிந்தது வரை ஒன்றுவிடாமல் எழுதி யிருந்தாள். அதை நான் எடுத்துப் படித்தேன்; கிழித்தேன். கிழித்து எறிந்ததோடு விடவில்லை. அடுப்பில் போட்டுச் சாம்பலாக்கி விட்டேன். வீரன் கண்ணில் அந்தக் கடிதம் அகப்பட்டிருந்தால், அதிலுள்ள விஷயத்தை அவன் அறிந்திருந்தால்! என்னைச் சித்திர வதை செய்திருப்பான். ஆனால், இப்பொழுது நான்தான் என் சிரிப்பால் அவனைச் சித்திரவதை செய்கிறேன். நானும் வீரனும் இப்பொழுது எங்கிருக்கிறோம் தெரியுமா? கல்கத்தாவில் நடக்கிறது எங்கள் வாழ்க்கை ! குமுதா இறந்து போன அன்று மாலையில் என் கணவர் கடை சம்பந்தமான வேலை யில் எங்கேயோ போய்விட்டார். குமுதா இறந்து போன கவலை வேறு அவருக்கு. அன்றிரவே நானும் வீரனும் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டோம். நான் வரும்போது சுமார் பத்தாயிரம் ரூபாய் வரையில் எடுத்துக்கொண்டுதான் புறப்பட்டேன். இரவே எங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள ரயிலடிக்கு வந்துவிட்டோம். ரயிலடிக்கு வீரன்தான் வண்டியோட்டி வந்தான். அதோடு அவன் வண்டியோட்டும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. என்னுடைய வேதனை வாழ்வும் தொலைந்தது. அந்த நடு நிசியில் வீரன் வண்டியை வெகு வேகமாகத்தான் ஓட்டிச் சென்றான். நான் அவனது தோளில் சாய்ந்திருந்தேன். குமுதா இந்தப் பாழும் சமுதாயப் பலிபீடத்தில் தன் உயிரைத் தத்தம் செய்த அதே நாளில் நாங்கள் எங்கள் இன்ப யாத்திரையை நடத்தினோம். எங்களுக்கு என்ன கவலை வந்து கிடக்கிறது! வண்டி ஊரின் எல்லையைத் தாண்டிக் கொண்டிருந்தது. ஒரே இருள். அந்த இருளில் ஒரு பெரிய ஜோதி நிரந்தரமாக நின்று எரிந்துகொண்டிருந்தது. ‘“அது என்ன வீரா?' என்று கேட் டேன். குழுதாவின் பிணம் சுடுகாட்டில் எரிகிறது” என்று அலட்சியமாக அவன் பதில் சொன்னான். குமுதாவிடத்தில் அவ !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/77&oldid=1699730" இலிருந்து மீள்விக்கப்பட்டது