பக்கம்:அரும்பு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விடிந்தால் தீபாவளி-இரவு முழுதும் ஊரெங்கும் வாண வேடிக்கைகள். தெருவுக்குத் தெரு-வீட்டுக்கு வீடு- போட்டி போட்டுக்கொண்டு வாணம் கொளுத்தி மகிழ்ந்தனர். நடுத்தெரு நாராயணி சந்தர்ப்பவாதிகளின் பச் சோந்தி உள்ளம் போல மத் தாப்புகள் பல நிறம் காட் டின். ஒரு சில அரசியல் தலை வர்களின் போராட்ட அறிவிப் புகள்போல அவுட்வாணங்கள் ஆகாயத்தில் கிளம்பின. ஆனாவுக்கு ஆனா கானாவுக்குக் கானா என்ற விதத்திலே எழு தப்படும் அர்த்தமற்ற அடுக் குச்சொல்வசனம் போலச் சீன வெடிகள் - ஊசிப் பட்டாசுகள்- தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டன. புதிய ஆடை களைக் கண்டு பூரிப்புத் தவழ ஓடிஆடினர் சிறுவர்,சிறுமியர். தலைத் தீபாவளிக்கு வந்திருக் கும் தம்பதிகள், உபசாரங்க ளுக்கும் கிண்டல் உபத்திர வங்களுக்குமிடையே உல்லாசப் பொழுது போக்கினர். ஊரே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் அந்த இரவில், நாரா யணி மட்டும் சோகத்தின் நிழலாகத் தன் வீட்டில் அமர்ந்திருந் தீபாவளி தமிழரின் திருநாளல்ல ; தமிழரின் இறந்த நாளைக் கொண்டாடும் ஆரியப் பண்டிகை. கருத்துக்கு ஒவ்வாத கதை அளப்பு. அதை நமது பண்டிகையாகக் கொண்டாடிக் குதூகலிப்பது குருட்டுக் கொள்கை. ஆகவே, அதில் கலந்து கொள்ளக் கூடாது' என்பதல்ல நாராயணியின் எண்ணம் ! அவள் அவ்வளவு அறிவு வளர்ச்சி பெற்றவளுமல்ல. போட்டி போட்டுக் கொண்டு புராணக் குட்டையிலே மூழ்கி எழும் பெண்மணிகளின் வரிசையிலே அவளும் ஒருத்திதான். ஆயினும், அவள் தீபாவளி தாள். கொண்டாடவில்லை. !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/79&oldid=1699733" இலிருந்து மீள்விக்கப்பட்டது