________________
75 காதைத் துளைத்துக்கொண்டுதானிருந்தது. ரதத்திலே அவள் கண்ட நரகாசுர வதக்காட்சி, அவள் நெஞ்சை விட்டு அகலவில்லை. நினைவுகள் அலை மோதின. நடுத்தெருவிலேதான் நாராயணியின் வீடு. நடுத்தெருவிலே வீடுகட்ட நகரசபையார் எப்படி அனுமதித்தார்கள் ; நகரசபை யாருக்கு நாராயணியின் மீது அவ்வளவு அனுதாபம் விழக் கார ணம் என்ன என்றெல்லாம் யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. அவள் வீடு இருந்த தெருவுக்குப் பெயரே நடுத்தெரு. நாராயணி நடுத்தெருவிலே, நடுத்தரமான குடும்பத்திலே நாலுபேர் அண்ணன் தம்பிகளுக்கிடையே பிறந்தவள். ஐந்து மக்களையும் விட்டுவிட்டுப் பெற்றோர் விடைபெற்றுக் கொண்டனர். மாயூரம் காவேரியாற்றிலே துலாமுழுக்கு ஆடுவதற்காகச் சென்ற சகோதரர்கள் நால்வரும், திரும்பி வராமலே போய்விட்டனர். இளைய தம்பி, ஆற்றுச் சுழலிலே சிக்கிக்கொள்ள, அவனை விடுவிக்க ஒருவர் பின் ஒருவராக மூவரும் குதித்து, அனைவரும் நேரே "மோட்சலோக்ம் போய்விட்டனர் என்ற செய்தி மட்டுமே நாராயணிக்குக் கிடைத்தது. இந்தச் சோகச்சுமை அவள் தலையிலே விழும்பொழுது அவள் பருவக்கொடி ! சிற்பியின் கைத்திறனே உயிர் பெற்றது போன்ற சிந்தை கவர் உருவம்! புருவம் - பருவம் - எல்லாமே, ஆண்களின் கருவமடக்கும் விதத்திலே அமைந்திருந்தன. அழகுச்சிலை ! அற்புதப் பதுமை ! தேன் மலர் ! திராட்சைக் கொடி ! ஆனால் அந்த வாசரோஜாவேலியின்றிப்-பாதுகாக்க யாருமின்றித் - தன்னந் தனியே வாடிக்கொண்டிருந்தது. "தந்தை தாய் அண்ணன் தம்பி எல்லாரையும் விழுங்கிவிட்டு, இந்தப் பாவிக்கு மட்டும் பாழும் உயிரை ஏன் வைத்திருக்கிறாய்?" என்று அவள் பகவான் சந்நி தானத்திலே பலமுறை அழுதிருக்கிறாள். அப்படி அழுவதற்காக அவள் ஆலயத்திற்குச் செல்லும்போது தான் குருக்கள் கிருஷ்ணய்யரின் சந்திப்பு ஏற்பட்டது. கோயில் குருக்கள் என்ற போதிலும் மிடுக்கான நடையுடை பாவனைகள் உடையவர். கழுத்திலே அழகான தங்கச் சங்கிலி; அந்தச் சங்கிலி யின் முனையிலே ருத்ராட்சக்காய்; இடுப்பிலே மயில் கண் வேட்டி; மேலே ஒரு வெண் பட்டுத்துண்டு; பி. ஏ. குடுமியுடன் கூடிய அமெரிக்கன் கிராப்பு - இவைதான் கோயில் குருக்கள் கிருஷ்ணய்ய ரின் அடையாளங்கள் ! மறந்துவிட்டேன் ; மன்னிக்கவும் ; அன்றா டம் சலவை செய்யப்படும் பூணூல் உண்டு மார்பிலே ! விபூதிப் பூக்சு உண்டு ; விஷ்ணுவுக்கு விசேஷமான நாட்களிலே நாமமும் போடுவார் ! பட்டையாக அல்ல; பக்குவமாக : சிறிய கோடாக; சிங்காரம் கெடாமல்!