பக்கம்:அரும்பு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

77 விட்டாய்? பெரிய குடும்பத்திலே தனி மரமாய் நின்று தவிக்கி றேனே; இது உனக்கு நியாயந்தானா?" என்று கதறினாள். பிரார்த்தனை முடிந்தது. பிரசாதம் தர அய்யர் வந்தார். விபூதியை வாங்கி நெற்றியிலே இட்டுக்கொண்டாள். திரும்பினாள். காய்ந்துபோன தொண்டையைக் கனைத்துக்கொண்டு, அய்யர் ஏதோ பேச வாயெடுத்தார். நாக்கு எழவில்லை. கஷ்டப்பட்டுப் பேசியே விட்டார். நடுக்கத்தோடு ! 'ஏனம்மா தினந்தோறும் இப்படிக் கண்ணிலே ஜலம் விடறே ? இதைக் கேட்டதும் நாராயணிக்குத் தூக்கி வாரிப் போட்டது. தானோ, ஒரு பருவ மங்கை. வீட்டைவிட்டு வெளியே கிளம்பு வதே தப்பு; கோயிலுக்கு வருவதால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால், அங்கே ஒரு ஆடவரோடு பேசுவது என்பது ஒத்துக்கொள்ளக்கூடிய விஷயமா ? இவ்வளவையும் அவள் நினைத்துப் பார்த்து, பதில் சொல்வதா இல்லையா என்ற தீர்மா னத்துக்கு வர நேரமில்லை. அவளும் நடுங்கியவாறே, "எல்லாம் என் விதி ! என்று பதில் கூறினாள்.

  • நாராயணி ! நோக்கு என்ன கஷ்டம்னு நேக்கு நன்னாகத் தெரியும் ; பெத்தவாள், பிறந்தவாள் எல்லாம் போயிட்டா! ஒண்டிக்கட்டையா இருந்து. தவிச்சிண்டிருக்கே !" என்று பீடிகை போட ஆரம்பித்தார் குருக்கள்.

நாராயணிக்கு அழுகை அதிகமாயிற்று. "நான் வருகிறேன்! என்று கூறிவிட்டுக் கர்ப்பக் கிரகத்தை விட்டு வெளியேறினாள் அவள். ஆண்டவன் தரிசனம் முடிந்ததும், கோயில் பிரகாரத்தைச் சுற்றிவிட்டுப் போவது நாராயணிபின் பழக்கம். அவ்வாறே, அன்றும் அவள் பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தாள். பிரகாரத்திலே, அப்பிரதக்ஷணமாகச் சுற்றி வந்துகொண்டிருந்த கிருஷ்ணய்யரை அவள் எதிரே கண்டாள். நாணத்தால் தலை யைக் குனிந்தவாறு அவரைக் கடந்து செல்ல முயன்றாள். கிருஷ் ணய்யர் சுற்று முற்றும் பார்த்தார். பிரகாரத்தின் ப க்கம் யாருமே வரவில்லை. எல்லோருமே கச்சேரி மண்டபங்களில் நிறைந்திருந்தனர். "நாராயணி, நில்! என்றார் மெதுவாக ! நாராயணிக்குக் கால் பெயரவில்லை. நின்று தீரவேண்டியிருந்தது. கிருஷ்ணய்யர் அவள் எதிரே ஓடினார். அவள் கால்களிலே தலை முட்டுமளவுக்குச் சாஷ்டாங்கமாகத் தெண்டனிட்டு வீழ்ந்தார். நாராயணிக்கு ஒன்றுமே புரியவில்லை. "சுவாமி!சுவாமி!! என்று கத்திவிட்டாள். நாராயணி! அடியேனை என்று ரட்சிப்பாய் ! தேவி விக்ர கத்தின் முன்னேகூட அடியேன் இப்படி நமஸ்கரித்தது கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/83&oldid=1699737" இலிருந்து மீள்விக்கப்பட்டது