பக்கம்:அரும்பு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 "அருகில் ஒன்றும், தலையில் ஒன்றும் வைத்திருப்பவர்தானே ஆண்டவன் - இது தெரியாதோ நோக்கு !'” என்று அவள் ஜடை யைப் பிடித்து விளையாடினார் குருக்கள். 'அய்யோ, இதெல்லாம் கூடாது - எனக்குப் பிடிக்காது!” என்று சொல்லிவிட்டுத், தட்டிக் கழித்துவிட எண்ணி வாயைத் திறந்தவள் - ஏனோ தெரியவில்லை "யாராவது பார்த்து விடுவார் கள்! என்று நாணிக் கோணி நகர்ந்தாள். இந்த வார்த்தை போதாதா அய்யருக்கு ! "எல்லாப் பசங்களும் பரத நாட்டியம் பார்த்துண்டு இருக் கான். ஒருத்தனும் வரமாட்டான் ; பயப்படாதே" என்று சொல்லி அய்யர் அவளை எட்டிப் பிடித்தார். அவள் கன்னம் சிவந் தது. அவரது கையிலே தன்னை ஒப்படைத்தாள். திடீரென்று நாராயணிக்கு ஞானோதயம் ஆயிற்று. அய்யரின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, 'சுவாமி, என்னைக் காப்பாற் றுங்கள் ! நீங்கள்தான் எனக்குத் துணை ! என்று 'ஓ'வென அலறினாள். அய்யர் அவளை வாரியெடுத்துத் தாவியணைத்துத் தைரியம் கூறி வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அவளும், ஆண்டவன் அருள் பாலித்துவிட்டான் என்ற நம்பிக்கையோடு வீட்டுக்குப் புறப்பட் டாள். அய்யரும் அந்தத் தையலின் கன்னத்தைச் சுவைத்த உதடுகளைக் கழுவாமலே ஆண்டவனுக்கு அர்ச்சனை மந்திரம் ஜெபிக்கக் கர்ப்பக்கிரகம் நோக்கி விரைந்தார். கோயில் பிரகாரத்திலே வாக்களித்த பிரகாரம், அய்யர் நாராயணியை எப்போதும் வைத்துக் காப்பாற்றுகிற அளவுக்கு அவள் வீட்டிற்கே வந்து சேர்ந்தார். "கோயில் குருக்களுக்கு அடிச்சுதடா சான்ஸ்! கொய்யாப் பழமாக இருந்தாள் அவளைக் கொய்துவிட்டார் அய்யர். என்ன இருந்தாலும் அனுபவிக்கப் பிறந்த ஜாதியப்பா அது! எத்தனையோ பேர் நத்திக்கிடந்தார்கள்; எல்லோரையும் எட்டி உதைத்துவிட்டுப் பூணூல் வலையில் மாட்டிக்கொண்டது அந்தப் புள்ளிமான் ! போகிறான் போ ! அவனாவது சுவைக்கட்டும் ! இளங்காளைக ளிடத்திலே இப்படிப் பொறாமை வடிவத்திலே ஆரம்பமான பேச்சு, விட்டுக் கொடுக்கும் தன்மையிலே முடிவு பெற்றது. -- கடவுளின் பக்கத்திலேயிருந்து கடமைகளைச் செய்கிற மனிதர் மிகவும் நல்லவராக இருப்பார் ; நம்பியவரைக் கைவிடமாட்டார்; அதிலும் பிராமணர் ; புரண்டு பேசமாட்டார் ; பொய் கூறுவது. பாபமெனக் கருதுவார்; பரமசிவன் பக்கத்திலே பார்வதிபோலத் தன்னையும் அருகே வைத்து ரட்சிப்பார் என்ற நம்பிக்கையிலே தான், நாராயணி, கோயில் குருக்களைத் தன் கணவனாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்தாள். கோயில் பிரகாரத்திலே கர்ப்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/86&oldid=1699729" இலிருந்து மீள்விக்கப்பட்டது