________________
81 கிரகத்தின் நிழல் பட்டு இருண்டிருந்த இடத்திலே இதழ்களைப் பரிமாறிக்கொண்டு- திரும்பி இல்லம் வந்த பிறகு, அன்றிரவு முழுவதும் தூங்காமல் அவள் யோசித்ததன் முடிவு குருக்களைத் தன் மணாளனாக ஆக்கிக்கொள்வது என்பதுதான். "ஏண்டி. நாரா, கவலைப்படுறே! நான் பிராமணன் - சூத்திரச்சின்னுதானே பார்க்கிறே ! பிராமணாளுக்குத் தலைவர் இருக்காரே; எங்க இராஜாஜி அவர் மகளை காந்தி மகனுக்குக் கொடுக்கலியோ - ஜாதி ஆசாரம் பேசினாளே ; என்ன ஆச்சு அது? அம்பேத்கார்னு ஒரு பறையன் ஆதித் திராவிடர்னு சொல்லிக் குவா- அவரைக் கல்யாணம் பண்ணிண்டு இருக்கிறது யார் தெரி யுமா ? எங்க ஜாதிக்காரி ஒருத்திதான்! ஜாதி ஆச்சாரம் எங்கேடி போச்சு ? ருக்மணி அருண்டேல் சமாச்சாரம் தெரியுமோ நோக்கு! அடி அசடு பித்துக்கொள்ளி ! சொல்றதைக் கேளுடி ! பயப் படாதே ! நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் என்று கிருஷ்ணய்யர் பிரசங்கம் ஒன்றே செய்தார். "ஜாதியாரெல்லாம் கல்யாணத்துக்கு வருவார்களா ?” என்று கேட்டு வைத்தாள் நாராயணி "வரவேண்டாமே-நான் ஜாதியாருக்குச் சொல்லப்போறதே இல்லை. நீ என்னோட சாயரக்ஷை கோயிலுக்கு வரவேண்டியது ; இதோ வாங்கி வச்சிருக்கேன் மாங்கல்யம்! ஆண்டவனுக்கு நேரா இதை உன் கழுத்திலே கட்டுவேன். நமக்கு மனுஷாள் சாக்ஷி வேண்டாம்! தேவாள் சாக்ஷி போதும் ஆண்டவாள் சாக்ஷி போதும் ! என்ன சொல்றே ?" என்று குழைவோடு கேட்டார் குருக்கள். மகேசன் சந்நிதானத்திலேயே தனக்குத் தாலி கட்டப் போகி றார் குருக்கள் என்ற செய்தி கேட்டு, நாராயணி குதூகலமடைந் தாள். அவள் கழுத்திலே தாலி மின்னியது. ஊரிலே பேசிக் கொண்டார்கள் கிருஷ்ணய்யர் நாராயணியை வைப்பாக வைத் திருக்கிறார் என்று ! அப்படியே பேசியவர்களிடம் அவரும் 'ஆமாம்' போட்டார். இப்படி ஊரார் பேசுவது நாராயணி காதிலேயும் விழுந்தது. அவள் அவரிடம் முறையிட்டாள். என்னை உங்கள் 'வைப்பு' என்று சொல்கிறார்கள் என்று ! அட பித்து ! 'வைப்பு' என்றால் ஏன் கோபப்படணும்! 'ஓய்ப்' என்ற இங்கிலீஷ் வார்த்தையைச் சொல்லத் தெரியாமல் அவா 'வைப்' என்று சொல்ரா ! அவ்வளவுதான் ! என்று ஒரு போடு போட்டார் கிருஷ்ணய்யர். கணவனே தெய்வம் என்று கருதிக்கிடக்கும் நாராயணியும் அந்தப் பேச்சையெல்லாம் அதிகமாக வளர்த்தாமல் அவரோடு சுமுகமாகவே பழகி வந்தாள். க.க.-6