பக்கம்:அரும்பு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 திடீரென்று ஒரு நாள், வீட்டுக்கு வந்த அய்யரின் முகத்திலே சோகம் படர்ந்திருப்பதை நாராயணி கண்டாள். காரணம் கேட் டாள். கோயில் வேலையிலிருந்து தர்மகர்த்தா நரசிம்ம நாயுடு தன்னை விலக்கிவிட்டார் என்று கூறினார் அய்யர். "" 'ஏன் ?'” என்று துடித்தாள் நாராயணி. "ஊரிலேயுள்ள பிராமணர்கள் எல்லாம் மாநாடு கூடினார் களாம். அதிலே நான் கலப்புத் திருமணம் செய்துகொண்டு உன்னோடு வாழ்வதைக் கண்டித்தார்களாம். சூத்திரச்சியோடு வாழுகிறவன் கோயிலிலே சாமியைத் தொட்டுப் பூஜை செய்யக் கூடாது என்று தர்மகர்த்தாவிடம் வலியுறுத்தினார்களாம். அதனால் தர்மகர்த்தா என்னை விலக்கிவிட்டார்” என்றார் அய்யர். இப்படி ஒரு புரட்சிகரமான செய்தியைக் கேள்விப்பட்ட நாராயணி, கிருஷ்ணய்யரைக் கட்டிப் பிடித்தபடி, "பிராமணோத் தமரே ! இந்த அனாதைக்காக உங்கள் ஆச்சார அனுஷ்டானங் களையெல்லாம் எதிர்த்து நின்றதோடு இல்லாமல், சமூகத்தையும் துச்சமாக மதித்துக் கோயில் வேலையையும் தியாகம் செய்து விட்டீர்களே " என்று கதறினாள். Co 'நாராயணி ! சிறு பிள்ளை மாதிரி அழுதுண்டு இருக்காதே ! உனக்காக நான் எவ்வளவோ செய்திருக்கேன். அதுமாதிரி நீ எனக்காக எதுவும் செய்யத் தயாராயிருக்கணும். அதுதான் எனக்குத் தேவை !" என்று சொல்லியபடி அவள் கூந்தலைக் கோதினார் அய்யர். "சுவாமி! தங்களுக்காக உடல் - பொருள் - ஆவி மூன்றை யும் தத்தம் செய்யத் தயாராயிருக்கிறேன்” என்று அவரது மடி யிலே சாய்ந்து விக்கி விக்கி அழுதாள் அந்த விழியழகி ! 'கிருஷ்ணய்யர் - நாராயணி' ஜோடியைப் பார்க்கும்போது ; அய்யோ, இந்த யுவதிக்கு இந்த மனிதன் அவ்வளவு பொருத்த மில்லையே' என்று சொல்லத்தான் தோன்றும். 'கிளி மாதிரி இருக்கிறாள் - இவனோ எலிமாதிரி இருக்கிறான்' - என்று விமர்சித்த வர்களும் உண்டு. 'பேரழகின் பிறப்பிடம் அவள் - இந்தப் பிராமணனோ அவளெதிரே விண்மீனுக்குமுன் மின்மினியாகத் தெரிகிறான்' - இப்படிப் பேசாதாரும் இல்லை. ஆனால், நாராயணி யின் கண்களோ, இவைகளுக்கெல்லாம் விதிவிலக்கு. அவள் மனக் கண்களுக்கு முன்னே எல்லோருடைய விமர்சனமும் தவிடு பொடி யாகி விட்டது. குலப் பெருமை இழந்தார் கோயில் குருக்கள் என்ற மதிப்பை இழந்தார் - இவ்வளவும் தனக்காக ! தன்னிடம் தந்த வாக்கை நிறைவேற்றுவதற்காக - என நினைக்கும்போது, நாரா யணிக்கு நேரே கிருஷ்ணய்யரின் உருவம் கிருஷ்ண பகவானின் உருவம்போலவே தோற்றமளித்தது. 'கண்ணா, மணி வண்ணா!>

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/88&oldid=1699724" இலிருந்து மீள்விக்கப்பட்டது