பக்கம்:அரும்பு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 போது, கண்களை அகல விரித்துப் பார்த்தாள். அவளருகே சாய்ந்த படி அமர்ந்திருந்தது கிருஷ்ணய்யர் அல்ல. கிருஷ்ணய்யரைவிட அழகான ஒரு மனிதர். நல்ல தேகக் கட்டுப் படைத்த வாலிபர். முறுக்கிவிடப்பட்ட இளம் மீசை அவரது முகத்தின் கம்பீரத்தை அதிகப்படுத்திக் காட்டிக்கொண் டிருந்தது. பரந்த மார்பகமும், அதை மூடியிருக்கும் பட்டுச் சொக்காயும், பார்ப்பவரைக் கவரத்தக்க விதத்திலே அமைந்திருந் தன. நெற்றியிலே லேசான நாமம்- சிவப்புக்கோடு மட்டும் ! அவர் நாராயணியை உற்றுப்பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட நாராயணிக்குப் பேச வாயெழவில்லை. எழுந் தோடுவதற்கும் சக்தியற்றுப் போனாள். ஏதோ சொல்ல நினைத் தாள். வாய் குழறிற்று. நீங்கள்....? நீங்கள்....? என்று மட்டுமே அவளால் கேட்க முடிந்தது. அப்படிக் கேட்டுக்கொண்டேயிருந்தாள். 'நான்தான் தர்மகர்த்தா நரசிம்ம நாயுடு" என்று கூறிய வாறு நாயுடு அவளை இறுகத் தழுவிக்கொண்டார். [ நாராயணி அவரிடமிருந்து விலகிக்கொண்டு, "அய்யோ தெய்வமே ! இது உனக்கு அடுக்குமா? என்று கதறினாள். தெய் வம் அப்போது என்ன வேலையாக எங்கோ போயிருந்ததோ? தன் பிரதிநிதியாகக் 'காமனை' அனுப்பியிருந்தது போலும் ! அவனும் நரசிம்ம நாயுடு பக்கம் சேர்ந்துகொண்டு தூபம் போட ஆரம்பித் தான். "கண்ணே நாராயணி ! என் பேச்சைக் கேளடி ; பெண் தெய்வமே !" என்று நாயுடு அவள் அழகின் முன்னே மண்டியிட் டார். "என் கணவர்தான் இதுபோன்ற இழி தொழிலுக்கு இசைந்தார் என்றால், கோயில் தர்மகர்த்தாவாகிய தாங்களும் பாவச் செயல் புரியலாமா ?” எனக் கண்ணீர் வடித்தபடி தர்ம கர்த்தாவின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு துடித் தாள் நாராயணி. 'பாபம், புண்ணியம் எல்லாம் எனக்குத் தெரியாது நாரா யணி ! அதைப் பற்றியெல்லாம் உன்னிடம் உபதேசம் கேட்கத் தேவையில்லை. வாரம் ஒரு முறை எது தவறினாலும், கோயிலிலே வாரியாரின் உபதேசம் தவறுவதில்லை. அதை வரி பிசகாமல் என் காதால் கேட்டுக்கொண்டுதான் வருகிறேன்” எனச் சிரித்தபடி அவளை வாரியணைத்தார் நாயுடு ! அவரது வாலிபம் துள்ளும் வலிமை மிக்க கரங்களிலே நாரா யணியின் மெல்லிய இடை சிக்குண்டு நெளிந்தது; வளைந்தது; துவண்டது! அந்தப் பலமான அணைப்பிலே சிக்கியபடியே நாராயணி அவரைப் பார்த்துப் பேசினாள். இருவருடைய முகங்களும் ஒன்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/90&oldid=1699719" இலிருந்து மீள்விக்கப்பட்டது