பக்கம்:அரும்பு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

85 கொன்று வெகு அருகினிலேதானிருந்தன. அவள் ஆத்திரத் தோடு கேட்டாள். "நீங்கள் செவிமடுக்கும் உபன்யாசங்களிலே இப்படித்தான் இன்னொருத்தன் மனைவியிடம் இன்பப் பிச்சை கேட்கச் சொல்லுகிறார்களோ ? என்று! எனக் 'ஆமாம் கண்ணே ஆமாம்! சாம்பல் பூசிய சிவனைத் தன் மனைவியோடு சரச சல்லாபத்திற்கு அனுப்பிய இயற்பகை நாய னார் பற்றிப் புராண காலக்ஷேபம் இன்று காலையிலேதான் ஆயிரக் கால் மண்டபத்திலே அதிவிமரிசையாக நடைபெற்றது' கூறியபடி அவள் முகத்தோடு தன் முகத்தைப் பொருத்த முனைந் தார். அவரிடமிருந்து எப்படியும் விடுபடவேண்டும் என்ற ஆவேச உணர்ச்சியோடு அவரை ஒரே தள்ளாகக் கீழே தள்ளிவிட்டுச் சுவரின் பக்கம் போய் ஒதுங்கி நின்று விம்மியழத் தொடங்கினாள் அவள். இதனால் நாயுடுவுக்குக் கோபம் பிறந்தது. '‘நாராயணீ! எனக்கொன்றும் நஷ்டமில்லை. நாளைக்கு உன் புருஷன், கையிலே காப்புப் போட்டுக்கொண்டு வீதியிலே போவான். அதைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையிருந்தால் உன் இஷ்டப்படியே நட ! என்று கூறிவிட்டு நாயுடு அறையைவிட்டு வெளியேறினார். கிருஷ் நாராயணி சிலைபோல் நின்றுகொண்டிருந்தாள். ணய்யர் அவளை நோக்கி வேகமாக ஓடிவந்தார் - அடி பாவி ! என்னை மோசம் செய்துவிட்டாயே ! என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு அலறினார். நாராயணிக்கு அவரோடு பேச மனமில்லை. பேசாமல் கட்டிலிலே உட்கார்ந்துகொண்டு கிருஷ் ணய்யரை எரித்துவிடுவதுபோல் பார்த்தாள். .. "ஏண்டி, இப்படி என்னைப் பார்க்கிறே ? என்னை ஜெயிலில் போடறதுக்கு நீயும் தீர்மானிச்சுட்டியா ? நாராயணி பேசாம கிருஷ்ணய்யர் பரிதாபமாகக் கேட்டார். லிருக்கவே, மீண்டும் அவரே பேச்சைத் தொடர்ந்தார். " அடி என் கண்ணு ! என் நிலைமை நோக்குத் தெரியாதடி ! கைக்கு விலங்கு காத்துண்டு இருக்கடி !... கோயிலில் அம்மன் தாலியையம்,மூலவிக்ரகத்துத் தங்கக் கவசத்தையும் நான் திருடி விட்டேன்னு பேரு கட்டிவிட்டானுங்கடி! வித்த இடத்திலே, அந்த வாங்கின பயலுகளும் என்னைக் காட்டிக்கொடுத்து விட்டா னுங்கடி! இப்ப என்னடி பண்றது ! தர்மகர்த்தா தயவு இல் லேன்னா தலை தப்பாதடி, தலை தப்பாது.' "" நாராயணி அழுதுகொண்டிருந்தாளே தவிரப் பேசவில்லை. அவளது நெஞ்சிலே எத்தனையோ. குமுறல்கள்! கொழுந்துவிட் டெரியும் தீ ஜுவாலையைப் போல இருந்தன அவள் கண்கள். 'எனக்காக இந்தத் தியாகம் பண்ணுடி! இது ஒண்ணும் பெரிய குற்றமில்லேடி. தர்மகர்த்தா நரசிம்ம நாயுடு நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/91&oldid=1699717" இலிருந்து மீள்விக்கப்பட்டது