பக்கம்:அரும்பு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

87 பேச்சு ! என்றார். பிறகு வென்றார். கிருஷ்ணய்யர் மறுபடி யும் கோயில் குருக்களானார். திருட்டுப்போன நகைகளைப் பற்றிச் சரியான புலன் கிடைக்கவில்லை என்று போலீசாரும் அறிவித்து விட்டனர். காலை முதல் அர்த்தஜாமப் பூஜை வரையிலே கிருஷ்ணய்யருக்குக் கோயிலிலே வேலைதான். இரவு இரண்டு மணி வரையில் தினந்தோறும் பக்தர்களுக்குப் பிரசங்கம் செய் வார். அதற்குமேல் கோயில் மண்டபத்திலேயே படுக்கை, உறக்கம் எல்லாம் ! நாயுடுவுக்கும் நாராயணிக்கும் ஒரு குழந்தை பிறந்து, பிறந்த நாலாம் நாள் நல்ல வேளையாக அது இறந்துவிட்டது. அது உயிரோடு இருந்திருந்தால் ஒருவேளை நாயுடுவின் தொடர்பு அறுந் திருக்கலாம். நாராயணி, கிருஷ்ணய்யர் என்று தனக்கு ஒரு நாயகன் இருந்ததையே மறந்துவிட்டாள். தர்மகர்த்தா ஒரு நாள் ஊரில் இல்லை என்ற செய்தி கிருஷ் ணய்யர் காதுக்கு எட்டியது. நகரசபைத் தலைவர் தேர்தலுக்காக ஏழெட்டு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி எங்கேயோ ஒரு கடாரம் பத்திற்கு ஓட்டிக்கொண்டு போய்விட்டார் என்றும், திரும்ப இரண்டு நாட்கள் ஆகும் என்றும் அய்யர் கேள்விப்பட்டார். நாராயணியைப் பற்றிய பழைய நினைவுகள் அய்யரைக் குடைந்தன. நாராயணியை நாயுடுவிடம் அர்ப்பணிக்காமல், ஜெயிலுக்கே போயிருந்தாலும் பரவாயில்லையே ; ஜெயில் என்ன இந்தக் கோயில் மண்டபத்தைவிடவா மோசமாக இருக்கப் போகி றது? என்று தனக்குத் தானே வருந்திக்கொண்டிருந்த அய்யருக்கு, எப்படியும் நாராயணியை ஒரு முறை சந்தித்துவிட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ளத் தக்க சமயம் கிடைத்ததாக எண்ணிப் புறப்பட்டார். நாராயணி வீட்டுக் கதவைத் தட்டினார். நாயுடுதான் வந்து விட்டார் என்ற நினைவில் அவளும் கதவைத் திறந்தாள். அய்யர் எதிரே நின்றார். நாராயணி அவரை உடனே வெளியேறுமாறு கட்டளையிட்டுத் தன் அறைப் பக்கம் போனாள். அய்யரும் அவளைத் தொடர்ந்தார். "மரியாதையாகப் போய்விடுவது நல்லது !" என எச்சரித்தாள் அவள். அய்யர் கெஞ்சினார். 'அன்றொரு நாள் கோயிலிலே முதன் முதலில் சந்தித்துக் கொஞ்சினீரே ; அந்த நாராயணியல்ல இவள் ! நாயுடு மனைவி தர்மகர்த்தா நரசிம்மரின் உடமை !' எனக் கர்ச்சித்தாள் அவள். - "என்ன இருந்தாலும் நீ என் மனைவியல்லவா?' அய்யருக்கோ தன் பசிக்கு எப்படியும் அவளை இரையாக்கித் தீரவேண்டும். அவளோ, எரிமலையாக இருந்தாள். அய்யரைச் சுட்டெரித்துவிடும் நெருப்புக் குண்டங்களாகக் காட்சியளித்தன அவள் விழிகள். "முடியுமா முடியாதா நாராயணி ?” முரட்டுத்தனமாக 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/93&oldid=1699706" இலிருந்து மீள்விக்கப்பட்டது