________________
88 அவளது கரங்களை இழுத்த அய்யரின் கன்னத்திலே நாராயணி 'பளார்' என அறைந்தாள். "நான் விபச்சாரிதான் அய்யரே; விபச்சாரிதான்! உம்மைப் போன்ற மனைவியை விற்கும் அரிச்சந்திரர்களின் மத்தியிலே என்னைப் போன்றவர்கள் எப்படிக் கற்போடு வாழமுடியும் ? நாராயணி பெருங்கூச்சலிட்டுப் பேசினாள். "பத்து வருடச் சிறைவாசம்! அதைத் தாங்க உம்மால் முடிய வில்லை ! பத்தினியின் உடலை விற்றீர் ! பகற் கொள்ளைக்காரனைப் போலப் பகவானின் சொத்தைத் திருடி, மனைவியைப் பரத்தை யாக்கி, மானத்தை இழந்து, உயிரைக் காப்பாற்றிக் கொண்ட உமக்கு என்னை மனைவி என்று அழைக்க உரிமை இருக்கிறதோ ? தூ ! வெட்கங்கெட்ட மனிதரே ! போமய்யா போம் ! உமது பித்தலாட்டங்களைப் பிரசங்கம் என்று போற்றப் பக்தர்கள் இருக் கிறார்கள் அவர்களிடம் போம் !" விரல் நீட்டித் தெருவழியைக் காட்டி நின்றாள் நாராயணி. அய்யரோ அவளை விடுவதாயில்லை. எப்படியும் அன்றைய தாகத் தைத் தணித்துச் செல்லவே விரும்பினார். எதிரே நிற்பது ஏதோ ஒரு மண் பதுமை என்ற எண்ணம்தான் இருந்தது நாராயணிக்கு ! அய்யர் அவளைத் தழுவிக் கொண்டார். 'தப்ப முடியாது நீ ! என்று கரகரத்த குரலிலே கத்தினார். நாராயணிக்கும் அவருக்கும் சிறிது நேரம் கடும் போராட்டமே நடைபெற்றது. எப்படியும் விடுபட முடியாது எனக் கண்ட நாராயணிக்குத் திடீ ரென ஒரு யோசனை - நாயுடு, மேசையிலே ஒளித்து வைத்திருக்கும் கைத்துப்பாக்கி ! ஓடிப்போய் மேசையைத் திறந்தாள். துப்பாக்கி யை எடுத்தாள். டுமீல் ! டுமீல் ! என ஒலி கிளம்பிற்று. "அய்யோ ! அய்யோ ! என்று அலறல். நாராயணி திகைத்தாள். அது அய்யரின் குரல் அல்ல நாயுடு வின் குரல்தான். ஓடிப்போய்ப் பார்த்தாள். நாயுடு அறை வாயிற்படியிலே சுருண்டு கிடந்தார். அய்யரோ எந்த ஆபத்து மின்றி கட்டிலுக்கடியிலே ஒளிந்திருந்தார். நாயுடுவைக் கொன்று விட்ட நாராயணி அவர்மீது விழுந்து புலம்பினாள். நகரசபைத் தலைவர் தேர்தலைப் பற்றிய கவலையைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு, அதற்குள் ஒருமுறை நாராயணியைப் பார்க்க ஓடிவந்த நரசிம்ம நாயுடு எதிர்பாராத வகையிலே நாரா யணியாலே சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் போலீசார் அப்படி வழக்குப் பதிவு செய்யவில்லை. அவர்கள் அய்யரை வீர ராக்கிவிட்டார்கள் கட்டிலுக்கடியிலே ஒளிந்து மயங்கிக் கிடந்த அய்யர்தான் நரசிம்மநாயுடுவை சுட்டுக்கொன்று வஞ்சம் தீர்த்துக் கொண்டார் என்று தீர்ப்புக் கூறப்பட்டது.