பக்கம்:அரும்பு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-89 ஆயுள் தண்டனை ! அந்தமட்டில் ஆண்டவன் நாராயணியின் துப்பாக்கி முனையிலிருந்தும் நீதி மன்றத்தின் தூக்குத் தண்டனை யிலிருந்தும் தன்னை விடுவித்தானே என்று மகிழ்ச்சி அய்யருக்கு ! நாராயணியோ, அனாதையானாள், அய்யருடன் குடும்பம் நடத்திய வரையில் 'நாராயணி அம்மாமி!" என்று ஊரார் அவளை அழைத்தனர். நரசிம்மநாயுடு பிரவேசித்த பிறகு, 'மிஸஸ் நாயுடு' என்று ஊர் கூறியது. இப்போது அவள், நடுத்தெரு நாராயணி ஆகிவிட்டாள். முன்பெல்லாம், நடுத்தெரு நாராயணி என்றால் அவள் இருக்கும் தெருவைக் குறிக்கும்-இப்போதோ? நடுத்தெருவுக்கு அர்த்தமே வேறு ! என்னதான் நாராயணியின் வாழ்க்கை கெட்டுவிட்டாலும் அவளது மனதிலே நரசிம்ம நாயுடுவுக்கு நல்லதோர் இடமுண்டு. அற்பபுத்திக்கார அய்யரைக் கொல்லப்போய் ஆசை நாயகனை யல்லவா கொன்றுவிட்டாள். அவசரத்தாலும் ஆவேசத்தாலும்! பாமாவினால் கொல்லப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்ட நரகாசுர வதைப் படல ஊர்வல ரதத்தைப் பார்க்கும்போது அவளுக்கு, தான் செய்த கொலைதான் ஞாபகத்திற்கு வருகிறது. அதனால் தான் தீபாவளி தினத்திலே அவள் அப்படி சோகமாக அமர்ந் திருந்தாள் போலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/95&oldid=1699702" இலிருந்து மீள்விக்கப்பட்டது