பக்கம்:அருளாளன் 1954.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளாளன் காட்டு மேள ஒலி இனியதாகக் கேட்கிறது. நாயனத்தின் ஒலியும் நெடுந்தூரம் வரைக்கும் கேட்கிறது. பெரிய ஆரவாரம்; ஆண்கள்,பெண்கள், குழந்தைகள், கிழவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரே ஆரவாரம் செய் கிறார்கள். இது ஏதோ ஒரு கல்யாண ஊர்வலம்போல இருக்கிறது. ஆம்! கல்யாண ஊர்வலந்தான்! பேரழகர். சிறந்த காளை, திருநாவலூரராகிய நம்பியாரூரர் தம் கல்யாணத்தின் பொருட்டு ஊர்வலம் சென்று கொண்டிருக் கிறார். அவர் குதிரையின்மேல் செல்கிறார். மாப்பிள்ளை அழைப்பு மிகவும் சிறப்பாக நடக்கிறது. ஊர்வலம் புத்தூர் என்ற ஊரை அணுகிவிட்டது. அப்பொழுதுதான் அந்தக் கிழவர் எதிர்ப்பட்டார். "என்ன கல்யாணம்?" என்று கேட்டார். "இந்த ஊர்க் குருக்களையாவின் பிள்ளைக்குக் கல்யா ணம்: நம்பி ஆரூரருக்குக் கல்யாணம்" என்று சொன் னார்கள். அப்படியா? கேட்டார். நம்முடைய ஆரூரனுக்கா?" என்று 'ஆமாம். அதே பிள்ளைக்குத்தான்" என்று அவர்கள் சொன்னார்கள். "எங்கே, எந்த ஊரில் நடக்கிறது கல்யாணம்?" $6. இந்த ஊரிலே சடங்கவி சிவாசாரியாருடைய பெண் ணுக்கும் நம்முடைய நாவலூர் நம்பிக்கும் கல்யாணம் நடக் கப் போகிறது என்று அவர்கள் சொன்னார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/10&oldid=1725512" இலிருந்து மீள்விக்கப்பட்டது