பக்கம்:அருளாளன் 1954.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனாளன் அப்போது ஆரூரர், "உமக்கு வெண்ணெய்நல்லூர் சொந்த ஊரானால், அந்த ஊரிலுள்ள சபையினரிடம் போய் இந்த வழக்கைப் பேசலாம், வாரும்' என்றார். "நல்ல காரியம்! வெண்ணெய்நல்லூருக்கு வா. அங் குள்ள வேதியர்களின் முன் மூல ஓலையைக் காட்டி நீ எனக்கு அடிமை என்பதைச் சாதிக்கிறேன். நல்ல வேளை! நீ கிழித்தது படி ஓலைதான்" என்று தம் கைத் தடியைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டார் வேதியர். அவரைத் தொடர்ந்து சுந்தரரும் அவருடைய சுற்றத் தாரும் ஏனையோரும் சென்றார்கள். திருவெண்ணெய் நல்லூர்ச் சபைக்குச் சென்று அவையிலிருந்த அந்தணர் களிடம் தம் வழக்கை முறையிட்டார் முதிய வேதியர் சுந்தரரோ, "எல்லாச் சாத்திரங்களையும் தேர்ந்த பெரியவர்கள் நீங்கள். நான் ஆதி சைவ அந்தணன் என் பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த அந்தணர் என்னைத் தம் அடிமை என்று சொல்கிறார். இது முறை யாகுமா?" என்று கேட்டார். 'இவர் உமக்கு அடிமை என்று வல் வழக்கு இடு கிறீரே!. அதற்கு ஏதேனும் அநுபோக பாத்தியம் உண்டா? ஆவண ஓலை உண்டா? அல்லது வேறு சாட்சி உண்டா? இந்த மூன்றில் ஒன்றேனும் காட்ட முடியுமா?" என்று அவையோர்கள் வேதியரைக் கேட்டார்கள். "இதோ மூல ஒலை வைத்திருக்கிறேன்." "எங்கே காட்டும்." 66 இவன் அதையும் கிழித்துவிட்டால் -- ?” நீர் அஞ்ச வேண்டாம். உமக்கும் உம்முடைய ஓலைக் கும் ஒரு தீங்கும் வரவொட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/13&oldid=1725516" இலிருந்து மீள்விக்கப்பட்டது