அருளாளன் மேல் அமர்ந்த திருக்கோலத்தைக் காட்டியருளினான். "முன்பு நீ நமக்குத் தொண்டன். பின்பு நம்முடைய ஏவலாலே பூவுலகில் பிறந்தாய். நாம் தடுத்தாட் கொள்வ தாகச் சொன்னபடி.இப்போது ஆட்கொண்டோம்" என்று ஒரு தெய்வக் குரல் கேட்டது. அந்த வாக்கைக் கேட்ட ஆரூரருக்கு உடம்பெல்லாம் புளகம் போர்த்தது. கீழே விழுந்து பணிந்து எழுந்து நின்றார்.கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. "எளியேனை ஆட் கொள்ளும் பொருட்டுத் தேவரீரோ எழுந்தருளியது? தனை அறியாத அசடனாகிவிட்டேனே!" என்று ஆராமை மீதூரக் கதறினார். "நீ நம்மை வன்மையாகப் பேசினாய்; ஆதலால் உனக்கு வன்றொண்டன் என்னும் பெயர் வழங்குவதாகுக? நீ மல ரால் நம்முடைய திருமேனி தீண்டி அருச்சிக்கும் குலத்திற் பிறந்தாய். ஆயினும் நமக்கு மிக்க விருப்பமான அருச்சனை பாட்டேயாகும். ஆதலால் நம்மை நீ செந்தமிழ்ப் பாட என்று பாடுவாயாக!" இறைவன் திருவாய் லால் மலர்ந்தருளினான். "அந்தணத் திருக்கோலம் பூண்டு வழக்குப் பேசி வந்து, ஆட்கொண்ட உண்மையறியாத இந்தப் பேதையை பெருமானே! தேவரீருடைய பெருங் கருணையை அறியாமல் நான் முரடனாக இருந்தேனே! தேவரீர் பெருமையை உணராத இந்த ஏழை எப்படிப் பாடுவேன்! தேவரீருடைய குணம் கடலைப் போன்றது. அதை எப்படி அறிந்து பாடப் போகிறேன்." "அப்பா, நீ என்னைப் பித்தன் என்று சொன்னாய் அல்லவா? அந்தச் சொல்லையே வைத்துப்பாடு. நீ என்னை முதல் முதலாக அறிந்த வகை அதுதானே? அப்படியே பாடு."
பக்கம்:அருளாளன் 1954.pdf/15
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை