அருளாளன் 7 இவ்வாறு இறைவன் கட்டளையிடவே, வன்றொண்டர் பாடலானார். பித்தாபிறை சூடீபெரு மானே அரு ளாளா! என்று பாடத் தொடங்கிவிட்டார். அதுமுதல் அவர் செந்தமிழ்த் தேவாரத் திருப் பாடல்களைப் பாடி இறை வனுக்குச் சொல்மலரால் அருச்சனை புரிந்து இன்புற்றார். இறைவனுடைய திருவருள் வழிகாட்ட, தமக்குள்ள இயற் கையான புலமையும் துணை செய்ய அழகிய தேவாரப் பதிகங்களைப் பாடலானார். . றைவனுடைய திரு முன்னர் நின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள், கன்றை இழந்த பசுவானது மீட்டும் கன்றை அடைந்தால் அக்கன்றுக்கு எப்படியிருக்குமோ அந்த உணர்ச்சி நிலையில் இருந்தார். இறைவன் தாய் போன்ற ஆருயிர்களெல்லாம். குழந்தைகள் போன்றவை. குழந்தைகள் தாயை மறந்துவிடுகின்றன. ஆனால் தாயோ குழந்தைகளை மறப்பதே இல்லை. தமக்குத் தாய் ஒருத்தி இருக்கவேண்டும் என்கிற தத்துவம் கூடக் குழந்தைகளுக் குத் தெரியாமல் இருக்கின்றது. வன். தாய் தன் குழந்தையை என்றும் மறப்பதே இல்லை.மறக்காமல் இருப்பதோடுகூட அந்தக் குழந்தை யுடன் என்று கூடப் போகின்றோம் என்று பித்துப் பிடித்து அலைகிறாள். அவளுக்கு எத்தனை பித்துப் பிடித் தாலும் குழந்தைக்கு. அவளைச் சென்று சாரவேண்டும் என்கிற நினைவே இருக்கிறதில்லை. 'பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்' என்று ஒரு பழமொழி வழங்கு கிறது அல்லவா? எத்தனை தான் தாய் அருகிலே வந்தாலும் அவளுடைய அருமைப்பாட்டை அறியாத அவளைப் புறக்கணித்து உதறிவிடுகிறான். அப்பொழு பிள்ளை
பக்கம்:அருளாளன் 1954.pdf/16
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை