பக்கம்:அருளாளன் 1954.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேன் அருளாளன் சுந்தரமூர்த்தி நாயனார் முன்பு ஆண்டவனுடைய திரு வருளை நிரம்பப் பெற்றவரானாலும்,தடுத்தாட் கொள்ளு என்று அவன் சொன்னமையினாலே, இட பிறவியில் சில காலம் அவனை மறந்திருந்தார். உலக வாழ் விலே இன்பம் பெறவேண்டும் என்று கருதித் திருமணத் திற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்தத் திருமணம் ஆகி யிருந்தால், நாவல் ஆரூரர் ஆண்டவனுடைய அடிமையாக இல்லாமல் உலகத்தின் அடிமையாகியிருப்பார். அதை மாற்றுவதற்காகப் பித்தேறி நின்றான் எம்பெருமான்; நாவல் ஆரூரரை ஆண்டு அவர் மூலமாக உலகத்துக் கெல்லாம் நல்லருளைக் காட்டவேண்டும் என்று கருதினான். இவற்றையெல்லாம் நினைத்தால், நாவலாரூரர் தம் சொல் அருச்சனையை, 'பித்தா' என்று ஆரம்பித்தது எவ் வளவு பொருத்தமாகத் தோன்றுகிறது! பித்தன் என்பதை இறைவன் சொன்னது மாத்திரம் அல்ல; நம்பி ஆரூரரே அவன் பித்தன் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார். அந்த உணர்ச்சியும் ஆண்டவனுடைய கட்டளையும் ஒன்று கூடவே, பாட்டு இயற்கையாக எழுந்தது. அ பித்தன் என்பதைப் பிறரும் உணர்ந்துகொள்ளும் படி ஒன்றைச் சொல்கிறார் சுந்தரர். மற்றவர்களுக்கும் பித் தனுக்கும் என்ன வித்தியாசம்? எது நல்லது, எது பொல் லாதது என்று பித்தனுக்குத் தெரியாது. சாப்பாட்டைக் கொடுத்தால் நாம் வாயிலே போட்டுக்கொள்கிறோம். பித்தனும் சில சமயங்களிலே போட்டுக்கொள்வான். இன் னும் சில சமயங்களிலே காலிலே போட்டுத் துகைப்பான்; அல்லது தலையிலே போட்டுத் தீற்றிக்கொள்வான். எந்தப் பொருளை எந்த இடத்திலே வைக்க வேண்டுமோ அந்த முறை தெரியாமல் பல பல வேடிக்கையான காரியங்களைச் செய்வான் பித்தன்,இங்கே சிவபெருமான் அப்படிச் செய் கிறானாம். என்ன செய்கிறான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/18&oldid=1725521" இலிருந்து மீள்விக்கப்பட்டது