10 அதளாளன் காலிலே போட்டு மிதித்த ஒரு பொருளைத் தலையிலே தூக்கி வைத்துக்கொண்டிருக்கிறான். ஒரு சமயம் இறைவன் தன்னை அழைக்காமலே யாகம் செய்த தக்கனைத் தண்டித் தான். யாகத்துக்கு வந்திருந்த தேவர்களுக்கெல்லாம் தண்டனை அளித்தான். அப்படி வந்த தேவர்களுக்குள்ளே சந்திரன் ஒருவன். அவனைக் காலாலே தேய்த்தாள். அது அவனுக்குரிய தண்டணையானாலும், திருவடியின் சம்பந்தம் பெற்றமையினாலே இறைவன் தலைமேலே அவன் ஏறிக் காண்டான். அவனைத் தலையிலே தூக்கி வைத்துக் கொண்டான் இறைவன். 'காலிலே மிதிபட்ட ஒன்றைத் தலையிலே தூக்கி வைத்துக்கொண்டான் ஒருவன்' என்று சொன்னால் அவனைப் பித்தன் என்று சொல்வதிலே என்ன தவறு? லே ஒரு வகையில் பைத்தியக்காரனுடைய செயலாகத் தோன்றும் அதுவே. கருணையாகிய பித்துப்பிடித்தவன் இறைவன் என்பதையும் காட்டுகிறது. எப்படி? ஆண்டவன் தன் காலடியிலே யாரேனும் வந்து விழுந்தால். முன்னாலே எத்தகைய அபராதத்தை அவன் செய்திருந்த போதிலும், அதை எண்ணாமல் உடனே அவனுக்கு உயர்ந்த நிலையைத் தந்துவிடுவான். இதனைத்தான் அந்தப் பிறை காட்டுகிறது. மற்றத் தேவாகளெல்லாம் தாங்கள் தாங்கள் செய்த காரி யங்களுக்குத் தண்டனை பெற்றார்கள்; மிக்க துன்பத்தை அடைந்தார்கள். ஆனால் தண்டனையாக இருந்தாலும் இறைவனுடைய காலடியிலே புகுந்தமையினாலே பிறைக்கு நல்ல பயன் கிடைத்தது. தெரியாமல் நாக்கிலே தேன் துளி சொட்டிவிட்டாலும் இனிக்கிறது. தெரிந்து சாப்பிட்ட பொழுதுதான் இன்பம், மற்றச் சமயங்களில் இன்பம் இல்லை என்று சொல்ல முடியுமா? அதுபோலச் சந்திரன் தான் நினைக்காமலே ஆண்டவனுடைய திருவடி சம்பந்தம் பெற்றான். இறைவன் கோபத்தினாலேதான் தேய்த்தான்.
பக்கம்:அருளாளன் 1954.pdf/19
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை