அருளாளன் 11. ஆனால் பெற்றது திருவடி சம்பந்தம். ஆகையினால் உடனே இறைவனுடைய தலையின்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான். அதுமாத்திரம் அல்ல. இறைவனுடைய திருவடி சம் பந்தம் பெறுவதற்கு முன்னாலே அந்தப் பிறை வளர்ந்தது; மீட்டும் தேய்ந்தது. இறைவனுடைய திருமுடியிலே புகுந்த பிறகு அது தேய்வதும் இல்லை; வளர்வதம் இல்லை. உயர்ந்த இடம், நிலையான நிலை ஆகியவைகளெல்லாம் இறைவனுடைய திருவடித் தொடர்பினால் உண்டாயின. பித்தா பிறை குடீ! இப்படிப் பித்தன் என்றும், பிறை சூடி என்றும் சொன்னதால் இறைவனுடைய தன்மை குறைந்துவிட வில்லை. அவன் எப்பொழுதும் தன்னுடைய பெருமையி னின்று சிறிதும் குறைவை அடைவதில்லை. அவன் பித்த னாக இருந்தாலும் பிறைகுடியாக இருந்தாலும், ஏனையோ ருடைய பித்துக்கும் ஏனையோருடைய செயலுக்கும் அவ னுடைய இயல்புக்கும் வேறுபாடு உண்டு. பித்தன் காலிலே பட்ட பொருளைத் தலையிலே வைத்துக்கொண்டால் அதிலே ஒரு பயனும் இல்லை. ஆனால் இங்கே காலிலே வைத்த பிறையைத் தலையிலே சூடிக்கொண்டதனால் இறைவ னுடைய பெருமையையே உலகம் நன்கு உணர்கிறது. மனிதனது அடிப்படையான பண்பு அவன் எந்தங்லையில் இருந்தாலும் தோன்றும். ஒரு தையல்காரன் பைத்தியக் காரன் ஆகிவிட்டான். அவன் என்ன செய்வான்? கத்தரிக் கோலில் கத்தரிக்கிற மாதிரியே கையைக் காட்டிக்கொண் டிருப்பான். எழுத்தாளனாக இருந்தால் சதா பேனாவைக் கையில் வைத்துக்கொண்டு எதோ எழுதுகிறமாதிரி இருப். பான். சொற்பொழிவாளனாக இருந்தால் எதையாவது
பக்கம்:அருளாளன் 1954.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை