. 12 அதளாளன்' உளறிக்கொண்டிருப்பான். பித்து நிலையிலும் அவரவர்க ளுடைய பழைய இயல்பு நன்றாகத் தெரியும். அதுபோல, இறைவன் பித்தனாகவும் பிறைசூடியாகவும் இருந்தாலும், அவ்வளவிலும் அவனுடைய பெருந்தன்மையே பின்பும் விட்டு ஒளிர்கின்றதே தவிர, அவற்றில் மற்றவர்களுக் குள்ள சிறுமை இல்லை.எப்போதும் பெருமானாகவே இருக் கிறான். இதை நினைத்தார் சுந்தரமூர்த்தி நாயனார்.'பித்தா விறைகுடி பெருமானே என்று பாடினார். " அவன் பித்தனாக வந்தாலும் பிறைசூடியாக வந்தாலும் உலகத்தார் போற்றும்படி இருக் கின்ற பெருமை எதனாலே உண்டாகின்றது? இத்தனை செயல்களுக்கும் மூ காரணமாக இருப்பது அவ னுடைய அருள். அவன் பித்தனாகத் தோற்றினாலும் மணவாளப்பிரானாகத் தோற்றினாலும் கோவணாண்டி யாகத் தோற்றினாலும் விடையில் ஏறினாலும் பூதங்க ளோடு சேர்ந்து கைதட்டிப் பாடினாலும் இன்னும் என்ன என்ன விதமான கோலங்களையோ திருவிளையாடல் களையோ உடையவனாக இருந்தாலும் அத்தனைக்கும் மூல காரணமாயிருப்பது அவனுடைய அருள். ஆதலின், "பித்தா யிறைசூடி பெருமானே" என்று மாத்திரம் சொல்லி நிறுத்த வில்லை. அதற்கு மேலே, இவ்வளவுக்கும் மூலப்பொருளாக உள்ள அருளைக் குறித்தார். ஆண்டவன் அருளை உடைய வன்; அருளாளன். அவனுடைய திருவுள்ளத்திலே அருள் கொப்புளிப்பதனாலே அவன் பித்தனாகிறான்; பிறைசூடி யாகிறான்; பெருமானாகிறான். L பித்தாபிறை சூம் பெருமானே அருளாளா; L என்று விளிக்கின்ற விளியிலே எத்தனையோ சாஸ்திரங் களின் உண்மைகளும், அவனுடைய திருவிளையாடல்களின் தத்துவங்களும் பொதிந்து கிடக்கின்றன.
பக்கம்:அருளாளன் 1954.pdf/21
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை