பக்கம்:அருளாளன் 1954.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளாளன் 18: அது மாத்திரம் அல்ல; அருளாளன் என்ற திரு நாமம் திருவெண்ணெய் நல்லூரில் இருக்கின்ற எம்பெரு மானுடைய பெயர். அங்கே உள்ள கோயிலுக்கு அருள் துறை என்று பெயர். சில இடங்களிலே ஊரின் பெயர் வேறாகவும், ஆலயத்தின் பெயர் வேறாகவும் பெயர் வேறாகவும் இருக்கும். வெண்ணெய் நல்லூர் என்பது ஊரின் பெயர். அங்கே உள்ள திருக்கோயிலுக்கு அருள் துறை என்று பழைய காலம் முதற்கொண்டே ஒரு பெயர் வழங்குகிறது. அதனை வடமொழியிலே கிருபாசிரமம் என்பர். அருளாளப் பெரு மான் அங்கே அருள் துறையிலே இருக்கிறான். 'பித்தா பிறைஞடீ பெருமானே அருளாளா' என்று முதல் அடி நிற்கிறது. அப்படி இறைவனை விளித்த பிறகு தம்மைப்பற்றிப் பேச வருகிறார் ஆரூரர். இறைவனைப் பார்த்த கண்ணைக்கொண்டு பிறகு தம்மைப் பார்த்துக் கொள்கிறார். பெரிய இன்ப அனுபவத்திலே இருப்பவருக் குத் தம்மை மறைந்த நிலைதான் தோன்றும். இறைவனு டைய அருள் வெள்ளத்துக்குள்ளே புகுந்த சுந்தரமூர்த்தி நாயனார் ஒரே வியப்பில் மூழ்கினார். ஆண்டவனை யன்றி வேறொன்றையும் பாராமல், 'பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா!' என்று சொல்லி ருகினார். பிறகு தம்முடைய நினைவு அவருக்குத் தோன்றுகிறது. "எத்தால் மறவாதே நினைக்கின்றேன்" "எதனா ம உன்னை மறக்காமல் நினைக்கிறேன்' என்கிறார். 'இறை வனே, இவ்வளவு சிறந்த கருணை உடைய உன்னை நான் எந்தக் காரணத்தினாலும் மறப்பதில்லை. துன்பம் உண் டானாலும் சரி; இன்பம் உண்டானாலும் சரி; உன்னை மறக் கிறது என்பது என்னிடம் இல்லை. வேகமாக ஓடினாலும் சும்மா நடந்தாலும் படுத்துக் கொண்டிருந்தாலும் பேசி னாலும் ஒரு மனிதன் மூச்சு விட்டுக்கொண்டே இருக்கிறான்..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/22&oldid=1725525" இலிருந்து மீள்விக்கப்பட்டது