பக்கம்:அருளாளன் 1954.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3..4 அருளாளன் இருதயம் துடித்துக் கொண்டே இருக்கிறது. அந்த இருத யத் துடிப்பை அவனுடைய துக்கமோ சுகமோ நிறுத்தாது. அது மாதிரி உலக வாழ்க்கையில் நான் எந்த விதமான செயல்களைச் செய்தாலும் செய்யா விட்டாலும் உன்னை நினைக்கிறதாகிற செயல் எந்தக் காலத்திலும் நிற்பதில்லை' என்று ன்று சொல்கிறார். மற்றச் செயல்கள் கூடுதலும் குறைவுமாக நடத்தலும், அடியோடு நிற்றலும் ஆகிய சந்தர்ப்பங்கள் பல உண்டு. அப்படி இல்லாமல் எந்தத் தடை வந்தாலும், எது முன்னே நின்றாலும் எதனாலும் உன்னை மறப்பதில்லை; மறக்காமல் நினைக்கிறேன் என்றார். எத்தால்மற வாதேநினைக் கின்றேன். றைவனுடைய திருவருளை முதலிலே நினைவு படுத்திக்கொண்டார் சுந்தார்.பின்னாலே தம்முடைய பக்தி யைச் சொன்னார். அதற்கு மேலே இன்னும் பக்குவம் எழுகிறது. சொல்லிக்கொண்டு வரும் பொழுதே அவருக்குப் பக்குவம் உயர்ந்து கொண்டு வருகிறது. அடடா! நான். நினைப்பதாவது? நான் நினைப்பதாயிருந்தால் முன்னாலே நினைத்திருக்க வேண்டுமே. நீ யல்லவா என்னை நினைக்கச் செய்தாய்?" என்று எண்ணுகிறார்; "நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய்" என்று முடிக்கிறார். நான் நினைக்கவில்லை. நீ நினைக்கச் செய்கிறாய்" என்று சொல்கிறார். பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா! எத்தால்மற வாதேநினைக் கின்றேன்மனத்து உன்னை வைத்தாய், இறைவன் நம்மை எப்படியெல்லாம் ஆட்டி வைக் கிறானோ அந்தப்படிதான் நாம் ஆடுகிறோம். அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/23&oldid=1725526" இலிருந்து மீள்விக்கப்பட்டது